Red Hat Enterprise Linux 4 Update 5 வெளியீட்டு அறிக்கை


அறிமுகம்

இந்த ஆவணத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கபப்டுகின்றன:

  • நிறுவல்-தொடர்பான அறிக்கைகள்

  • பொதுவான தகவல்

  • தொழில்நுட்ப முன்பார்வைகள்

  • கர்னல் அறிக்கை

  • இயக்கிகள் மற்றும் வன்பொருள் சேவையில் மாற்றம்

Red Hat Enterprise Linux 4 Update 5 பற்றிய தற்போதைய தகவல், இந்த வெளியீட்டு அறிக்கையில் காணப்படாது. மேம்படுத்தப்பட்ட Red Hat Enterprise Linux 4 Update 5 இன் வெளியீட்டு அறிக்கையை பின்வரும் இணைய முகவரியில் பார்க்கவும்:

http://www.redhat.com/docs/manuals/enterprise/

நிறுவல்-தொடர்பான அறிக்கைகள்

பின்வரும் பிரிவில் Red Hat Enterprise Linuxஇன் நிறுவல் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.

குறிப்பு

ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux 4 ஐ Update 5 ஆல் மேம்படுத்தவும், மாற்றப்பட்ட அந்தத் தொகுப்புகளையும் மேம்படுத்த, நீங்கள் Red Hat Network ஐ பயன்படுத்தலாம்.

Red Hat Enterprise Linux 4 Update 5 புதிதாக நிறுவ அனகோண்டாவை பயன்படுத்தி புதிதாக நிறுவலாம் அல்லது Red Hat Enterprise Linux 4 இன் சமீபத்திய மேம்படுத்தல் பதிப்புக்கு மேம்படுத்தலாம்.

  • Red Hat Enterprise Linux 4 Update 5 இல் உள்ளவைகளை குறுவட்டுகளில் நகலெடுக்க விரும்பினால் (பிணையம் வழியாக நிறுவ தயார்படுத்த) இயக்கத்தளத்திற்கான குறுவட்டுகளை மட்டும் நகலெடுக்கவும். கூடுதல் குறுவட்டுகளையோ அல்லது அடுக்கு மென்பொருள்களையோ நகலெடுத்தால் கோப்புகள் அனகோண்டா கோப்புகளின் மேல் எழுதப்பட்டு சிக்கலை நிறுவலை தடை செய்யும்.

    Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் இந்தக் குறுவட்டுக்களைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும்.

  • நீங்கள் தொடர் பணியகம் வழியாக Red Hat Enterprise Linux 4 Update 5 ஐ நிறுவினால், புகுபதிவு வரி தோன்றாது. இதில் பணிபுரிய, /etc/yaboot.confஐ திறந்து பின்வரும் வரியைச் சேர்க்கவும்:

    append="console=tty0 console=ttyS4 rhgb quiet"
    

    இந்த வரியை திருத்த, console=tty0 மற்றும் console=ttyS4 ஆகியவற்றின் வரிசையை மாற்றி பின்வருமாறு வாசிக்கப்படும்:

    append="console=ttyS4 console=tty0 rhgb quiet"
    

பொதுவான தகவல்

ql2xfailover சேவை மற்றும் Multipath

Red Hat Enterprise Linux 4 ql2xfailover சேவையை கொண்டிருப்பதில்லை, எனவே இது சேவையகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

multipathingஐ செயல்படுத்த, mdadmஐ பயன்படுத்தவும்dm-multipath பற்றிய மேலும் தகவலுக்கு, man multipath கட்டளையை பயன்படுத்தி கையேடு பக்கத்தைப் பார்க்கவும்.

AMD-அடிப்படையான கணினிகளில் MCFG

PCI ஆய்வின் போது, Red Hat Enterprise Linux 4 Update 5 ஆனது MCFG (memory-mapped PCI configuration space) இலிருந்து தகவலை பெற்று பயன்படுத்த முயற்சிக்கும். AMD-கணினிகளில், கர்னல் MCFG அட்டவணையைப் பகுக்காததால் ஒரே வடங்களில் இந்த வகை அணுகாது.

இதில் பணிபுரிய, pci=conf1 அளவுரு அல்லது pci=nommconf/etc/grub.conf இன் கர்னல் துவக்க வரியில் சேர்க்கவும். எடுத்துக்காட்டாக:

title Red Hat Enterprise Linux AS (2.6.9-42.0.2.EL)
        root (hd0,0)
        kernel /vmlinuz-2.6.9-42.0.2.EL ro root=/dev/VolGroup00/LogVol00 rhgb quiet pci=conf1
        initrd /initrd-2.6.9-42.0.2.EL.img

இதனை செய்ய கர்னல் PCI Conf1 அணுகலை MCFG-அடிப்படையான அணுகலை பயன்படுத்தும்.

up2dateஐ பயன்படுத்தி Rollback செய்கிறது

up2date விருப்பங்களான --undo மற்றும் list-rollbacks இப்போது நீக்கப்பட்டன. தற்போது, பிரிந்துரைக்கப்பட்ட எடுத்துக்கொள்ளும் முறை Multi-state Rollback வசதியில், Red Hat Network இல் வாய்ப்பளித்தல் உரிமத்தில் கொடுக்கப்படுகிறது. இதனைப் பற்றி மேலும் தகவலுக்கு,http://www.redhat.com/rhn/rhndetails/provisioning/ஐ பார்க்கவும்.

மாற்றாக, நீங்கள் கைமுறையாக RPM ஐ குறைத்து கொள்ளலாம். இதனை செய்ய, பழைய RPM ஐ எடுத்து பின்வரும் கட்டளையை இயக்கவும்:

rpm -Uvh --oldpackage --nosignature --nodigest <filename of old RPM>

மெய்நிகராக்கம்

Red Hat Enterprise Linux 4 Update 5 இப்போது பகுதி மெய்நிகராக்க விருந்தினராக சேவையளிக்கப்படுகிறது, ஆனால் dom0 ஆக பயன்படுத்த முடியவில்லை.

தற்போது, Red Hat Enterprise Linux 4 Update 5க்கான பகுதி மெய்நிகராக்கம் பின்வரும் சிக்கல்களை கொண்டுள்ளது:

  • PV-FB (ParaVirtualized FrameBuffer) தற்போது en-US தவிர மற்ற விசைப்பலகைகளுக்கு துணைபுரிவதில்லை. மற்ற விசைப்பலகை மூலம் சில விசைகளை தட்டச்சு செய்ய முடியாமல் போகிறது. இந்த சிக்கல் Red Hat Enterprise Linux 4 இன் இனிவரும் மேம்படுத்தலில் அறிக்கையிடப்படும்.

  • பகுதி மெய்நிகராக்கப்பட்ட செயற்களங்கள் சுட்டி நகர்த்தலின் தானாக கண்டறியும் நிலைகாட்டியில் பிழையை கொண்டுள்ளது. இது Red Hat Enterprise Linux 4 இனிவரும் மேம்படுத்தலில் அறிக்கையிடப்படும்.

  • மெய்நிகராக்கப்பட்ட பிணையம் மற்றும் வட்டு சாதனங்கள் பகுதி மெய்நிகராக்க விருந்தினர்களுக்குத் துணைபுரியும்நேரடியாக கட்டுப்படுத்தும் PCI, USB, அச்சடிப்பி அல்லது தொடர் சாதனங்கள் துணைபுரிவதில்லை.

Slow Disk Dump

Slow disk dump ஆனது block_order அளவுருவைப் பயன்படுத்தி மேம்படுத்தப்படலாம். இந்த அளவுரு I/O தொகுதி அளவை டம்பில் எழுதும் போது குறிக்கப்படுகிறது. சோதனை செய்வது முன்னிருப்பு மதிப்பு 2 பெரும்பாலான தகவிகள் மற்றும் கணினி கட்டமைப்புகளில் நன்றாக வேலை செய்வதைக் காட்டுகிறது.

Megaraid வன்பொருளில் வட்டு டம்ப்கள் (சில கணினி இயக்கத்தளங்களில் மற்றும் சில கட்டமைப்பில்) மெதுவாக இருக்கும். இதனை அறிக்கையிட, block_order அளவுரு மதிப்பை அதிகரிக்கவும்.

பெரிய block_order மதிப்புகள் அதிக அளவு தொகுதி நினைவகத்தை எடுத்துக்கொள்ளும். block_order அளவுரு பற்றிய மேலும் தகவலுக்கு, /usr/share/doc/diskdumputils-<version>/README ஐ பார்க்கவும் (<version>diskdumputilsஇன் தொடர்புடைய பதிப்பு தொகுப்பை நிறுவி மாற்றவும்).

லினக்ஸ் அணுகலுக்கு iSeries

லினக்ஸில் iSeries ODBC இயக்கி ஒரு புதிய சாதனத்தால் லினக்ஸிற்கு iSeries Access ஆல் மாற்றப்பட்டது. இந்தப் புதிய சாதனத்தைப் பின்வரும் இணைப்பிலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்:

http://www.ibm.com/eserver/iseries/access/linux/

லினக்ஸுக்கு iSeries அணுகல் iSeries அணுகலில் சமீபத்திய வரவாகும். இது லினக்ஸ் அடிப்படையான அணுகலை iSeries சேவையகங்களுக்குக் கொடுக்கிறது. லினக்ஸில் iSeries அணுகல் பின்வருவனவற்றை அனுமதிக்கிறது:

  • iSeriesக்கு அதன் ODBC இயக்கியை பயன்படுத்தி DB2 UDB (பொதுவான தரவுத்தளம்) அணுகுதல்

  • லினக்ஸ் கிளையனிலிருந்து ஒரு 5250 அமர்வை iSeries சேவையகத்தில் கொடுக்கிறது

  • EDRS (Extended Dynamic Remote SQL) வழியாக DB2 UDB ஐ அணுகுதல்

  • 32-bit (i386 மற்றும் PowerPC) மற்றும் 64-bit (x86-64 மற்றும் PowerPC) தளங்களில் துணைபுரிகிறது

ibmasm

ibmasm தொகுப்பு IBM Advance System Management PCI Adapter உடன் தொடர்பு கொள்ள உதவுவதாகும், RSA I எனவும் அழைக்கபடுகிறது. நீங்கள் RSA IIஐ பயன்படுத்தினால், ibmasm தொகுப்பினை தொடர்புடைய RSA IIக்கு பதிவிறக்கிய பின் கைமுறையாக நீக்கவும்.

தொழில்நுட்ப முன்பார்வைகள்

தொழில்நுட்ப முன்பார்வை வசதிகளை தற்போது Red Hat Enterprise Linux 4 Update 5 இன் கீழ் சந்தா சேவைகளில் துணை புரிவதில்லை, அவை முழுமையாக வேலை செய்வதில்லை மற்றும் அது தயாரிப்புக்குப் பயன்படுவதில்லை. எனினும், இந்த வசதி வாடிக்கையாளரை திருப்திப்படுத்தவும், விரிவான ஒரு எதிர்பார்த்தலுக்கும் சேர்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த வசதியை தயாரிப்பு இல்லாத சூழலில் பயனுள்ளதாக காணலாம். வாடிக்கையாளர்களும் இந்த வசதிக்கு முழுமையாக சேவையளிக்கும் முன் தொழில்நுட்ப முன்பார்வை பற்றிய கருத்துக்களை கூறலாம். அதிக அளவு பாதுகாப்பு சிக்கலில் பிழைத்திருத்தங்கள் கொடுக்கப்படும்.

தொழில்நுட்ப முன்பார்வை வசதி உருவாக்கத்தின் போது, கூடுதல் கூறுகள் பொதுவாக சோதனை செய்ய வரும். இதுவே இனிவரும் வெளியீட்டில் Red Hat முழுவதும் துணைபுரிய அறிகுறியாகும்.

Systemtap

Systemtap இலவச மென்பொருள் (GPL) வடிவமைப்பை இயங்கும் லினக்ஸ் கணினி பற்றி தகவலை சேகரிப்பது மூலம் கொடுக்கிறது. இது அதன் திறன் அல்லது செயல்பாடு சிக்கலை ஆராயும். systemtap உதவியால், நிரலாளர்கள் சலிப்படைதல், மறு ஒருங்கிணைத்தல், நிறுவல் மற்றும் மறு துவக்க வரிசை போன்றவற்றுக்கு செல்ல வேண்டாம்.

Frysk GUI

frysk திட்டத்தின் நோக்கம் அறிவார்ந்த, பகிரக்கூடிய, கணினி கண்காணித்தலில் மற்றும் பிழைத்திருத்தும் கருவியை நிரலாளர் மற்றும் கணினி நிர்வாகிகளால் உருவாக்குவதேயாகும்:

  • இயக்கும் பணிகள் மற்றும் திரட்களை கண்காணித்தல் (உருவாக்கம் மற்றும் சிக்கலான நிகழ்வுகளையும் சேர்த்து)

  • பூட்டும் விதிமுறைகளை பயன்படுத்தி கண்காணித்தல்

  • பாதுகாப்பற்ற deadlocks

  • தகவலைப் பெறுதல்

  • எந்தப் பணியையும் பட்டியலிருந்து தேர்ந்தெடுத்து பிழைத்திருத்தம் செய்கிறது அல்லது frysk ஐ அழியும் அல்லது தவறான ஒரு மூல குறியீடு (அல்லது வேறு) சாளரத்தில் திறக்க அனுமதிக்கலாம்.

Red Hat Enterprise Linux 4 Update 5 இல் frysk வரைகலை பயனர் முகப்பு ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாகும், இங்கு frysk கட்டளை வரி முகப்பில் முழுவதும் துணை புரிகிறது.

கர்னல் அறிக்கை

இந்தப் பிரிவில் கர்னல் தொடர்பான மேம்படுத்தல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.

பொதுவான கர்னல் குறிப்புகள்

  • CONFIG_SERIAL_8250_MANY_PORTS 64க்கு அதிகரிக்கப்பட்டது.

  • sata_nv தொகுதி இப்போதுdiskdumpக்கு துணைபுரிகிறது.

  • acpiphp இயக்கி இப்போது ACPI-அடிப்படையான hotplugகளில் இணைக்கப்பட்ட தகவிகளில் துணைபுரிகிறது.

  • (x86;x86_64) பகுதி மெய்நிகராக்க விருந்தினர் சேவை சேர்க்கப்பட்டுள்ளது

  • CIFS (Common Internet file system) பதிப்பு 1.45க்கு மேம்படுத்தப்பட்டது

இயக்கத்தள-குறிப்பிட்ட மேம்படுத்தல்கள்

  • SHPC (Standard Hot Plug Controllers) க்கு PXH6700 மற்றும் PHX6702 கணினிகளில் MSIஐ செயலிழக்க திறனை கொடுக்கிறது; இந்தக் கணினிகள் intX முறையை பயன்படுத்தும்.

  • Intel ICH9 chipsetகள் இப்போது துணைபுரிகிறது

  • PowerNow! (புதிய அலைவரிசை கட்டுப்பாட்டுடன்) இப்போது H206 செயலியில் துணைபுரிகிறது

  • Timer skew சிக்கல் PowerNow! இயக்கிகளில் சரி செய்யப்பட்டது

  • Quad-core செயலிகள் இப்போது துணைபுரிகின்றன

  • RDTSCP (Read Time-Stamp Counter Pair), செயலியின் கொடுக்கப்பட்ட தகவல் வாசிப்பு திரைத்திறனில் நன்றாக உள்ளது, இப்போது துணை புரிகிறது

  • MCE Thresholding இப்போது AMD 0x10 செயலிகளில் துணை புரிகிறது

  • PCI-Express இப்போது SGI Altix தளத்திற்கு துணைபுரிகிறது

  • இப்போது SHUB2 துணை புரிகிறது

இயக்கிகள் மற்றும் வன்பொருள் சேவைகளில் மாற்றங்கள்

  • இப்போது Sealevel 8-port serial cards துணை புரிகிறது

  • இணைய நிழல்பட கருவிகளில் துணைபுரியும் ஒரு புதிய PWC (Philips Web Cam) சேர்க்கப்பட்டுள்ளது

  • IBM Advanced Management Module 2 USB சாதனங்களில் USB சேமிப்பகங்களில் பல LUN களில் (Logical Unit Numbers) சேர்க்கப்பட்டது

  • EDAC (Error Detection and Correction) இப்போது AMD Opteron இல் துணைபுரிகிறது

  • Alsa இயக்கி பதிப்பு 1.0.9 இல் மேம்படுத்தப்பட்டது

  • AlsaBroadwater தளங்களில் துணை புரிய சேர்க்கப்பட்டது

  • LMSensors smsc47b397 இயக்கி மேம்படுத்தப்பட்டது

  • ixgb இயக்கி 1.0.109-k2 பதிப்புக்கு மேம்படுத்தப்பட்டது

  • r8169 பிணைய இயக்கி பதிப்பு 2.2LKக்கு மேம்படுத்தப்பட்டது

  • Pathscale IB தகவி இப்போது துணைபுரிகிறது

  • சேர்க்கப்பட்ட qla4xxx இயக்கி Qlogic iSCSI வன்பொருள் துவக்கியில் துணை புரிய வேண்டும். qla3xxx இயக்கி அதே வன்பொருளில் LAN இணைப்புகளில் கொடுக்கப்பட வேண்டும்.

  • OFED 1.1க்கு மேம்படுத்தப்பட்ட Infiniband

  • பதிப்பு 7.2.7-k2 Intel Pro/1000 PT தகவி, ICH8 LAN மற்றும் Intel Dual Port 1Gb Ethernet PCI-Express தகவி ஆகியவற்றுக்கு துணை புரிய, மேம்படுத்தப்பட்ட e1000 இயக்கி

  • பதிப்பு 1.4.43-rhக்கு மேம்படுத்தப்பட்ட BNX2 இயக்கி

  • Broadcom BCM5787M, Broadcom 5715 PCIExpress தகவி, Broadcom 5704S சிப் ஆகியவற்றுக்கு துணைபுரிய, பதிப்பு 3.64-rhக்கு மேம்படுத்தப்பட்ட Broadcom TG3 இயக்கி

  • ipr இயக்கி SAS/SATA க்கு துணைபுரிய மேம்படுத்தப்பட்டது

  • LSI Logic SAS ZCR இப்போது துணைபுரிகிறது

  • sata இயக்கி இப்போது ULi M5289 SATA கட்டுப்படுத்தியில் துணை புரிகிறது

  • cciss இயக்கி மேம்படுத்தப்பட்டது

  • SLIM விரிவாக்க அட்டையை JS21 இல் துணைபுரிய செய்ய மேம்படுத்தப்பட்ட qla2xx இயக்கி

  • பதிப்பு 3.02.73rh க்கு மேம்படுத்தப்பட்ட MPTSAS இயக்கி

  • LSI MegaRAID இயக்கி மேம்படுத்தப்பட்டது

  • 8139cp பிணைய இயக்கி இப்போது netdumpக்கு துணை புரியும்; இது netdumpஐ இயக்க, முழு மெய்நிகராக்கப்பட்ட Red Hat Enterprise Linux 4 விருந்தினர்களை செயல்படுத்தும்

( x86 )

mirror server hosted at Truenetwork, Russian Federation.