அறிமுகம்

இந்த ஆவணத்தில் பின்வரும் தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன:

  • நிறுவல் தொடர்பான குறிப்புகள்

  • தொழில்நுட்ப முன்பார்வைகள்

  • தெரிந்த பிரச்சனைகள்

  • பொதுவான தகவல்கள்

  • இயக்கி மேம்படுத்தல் நிரல்

  • சர்வதேசமயமாக்கல்

  • கர்னல் குறிப்புகள்

Red Hat Enterprise Linux 5 இன் சில மேம்படுத்தல்கள் இந்த வெளியீட்டு அறிக்கையில் காணப்படாது. வெளியீட்டு அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை பின்வரும் URLல் பார்க்கவும்:

http://www.redhat.com/docs/manuals/enterprise/RHEL-5-manual/index.html

நிறுவல் தொடர்பான குறிப்புகள்

பின்வரும் பகுதியில் Red Hat Enterprise Linux நிறுவல் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இருக்கும் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.

குறிப்பு

ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux ஐ மேம்படுத்த, நீங்கள் மாற்றப்பட்ட தொகுப்புகளை மேம்படுத்த Red Hat Network ஐ பயன்படுத்தலாம்.

Red Hat Enterprise Linux 5 புதிதாக நிறுவ அனகோண்டாவை பயன்படுத்தலாம், அல்லது Red Hat Enterprise Linux 4லிருந்து Red Hat Enterprise Linux 5 க்கான சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பு மேம்படுத்தலை செய்யலாம்.

நீங்கள் Red Hat Enterprise Linux 5 குறுவட்டுகள் உள்ளடக்கங்களை நகல் எடுக்க வேண்டுமென்றால் (எடுத்துக்காட்டாக, ஒரு பிணைய அடிப்படையான நிறுவலில்) இயக்கத்தளம் மட்டும் உள்ள குறுவட்டுக்களை மட்டும் நகலெடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும். கூடுதல் குறுவட்டு அல்லது அடுக்கிடப்பட்ட மென்பொருள் குறுவட்டுக்களை நகலெடுக்க வேண்டாம், இது அனகோண்டாவின் இயல்பான செயல்பாட்டில் கோப்புகளை மேலெழுதும். இந்த குறுவட்டுகள் Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் நிறுவப்பட வேண்டும்.

ISO உள்ளடக்கங்கள் மற்றும் பதிவு செய்தல்

தயாரிப்பு குறிப்பிட்ட மாறிகள் மென்பொருள் கூறு தொகுப்புகளின் நிறுவனத்தில் Red Hat Enterprise Linuxஇன் முந்தைய பதிப்பிலிருந்து மாற்றப்பட்டது. வேறுபட்ட மாறிகள் மற்றும் ISO உருக்கள் இரண்டு என குறைந்துள்ளது:

  • Red Hat Enterprise Linux 5 சேவையகம்

  • Red Hat Enterprise Linux 5 கிளையன்

ISO உருக்கள் பல விருப்பமான தொகுபதிவகங்களுக்கு மென்பொருள் தொகுப்புகளை கொண்டுள்ளது, இது கோர் பகிர்வில் கூடுதல் செயல்பாடுகளை கொண்டுள்ளது. அதாவது மெய்நிகராக்கம், கொத்திடல் அல்லது கொத்து சேமித்தல் ஆகியவையாகும். சேவையக மாறிகள், கிளையன் மாறிகள் மற்றும் இருக்கும் விருப்பங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு, http://www.redhat.com/rhel/ இல் பார்க்கவும்.

விருப்ப உள்ளடக்கங்களுடன் ஒரே கிளை அல்லது ISO உருவுடன், சந்தாவாக்கப்பட்டு நிறுவலுக்கு வழங்கப்பட்ட கூறுகளுக்கிடையே பொருத்தமில்லாமல் இருப்பதை தடுப்பது முக்கியமானதாகும். அவ்வாறு பொருத்தமில்லாமல் இருந்தால் அது பிழையாகவும், அபாயகரமானதாகவும் இருக்கலாம்.

ஒருங்கிணைக்கப்பட வேண்டிய கூறுகள் சந்தாவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, Red Hat Enterprise Linux 5 நிறுவல் எண்ணை தேவைப்படுத்துகிறது, இது நிறுவிக்கு சரியான தொகுப்பினை கொடுக்க கட்டமைக்க பயன்படுகிறது. நிறுவல் எண் உங்கள் சந்தாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நீங்கள் நிறுவல் எண்ணை உள்ளிடாமல் தவிர்த்தால், அதன் முடிவை கோர் சேவையகம் அல்லது பணிமேடை நிறுவலில் காணலாம். கூடுதல் செயல்பாடுகள் கைமுறையாக பின்னர் சேர்க்கப்படும். நிறுவல் எண் பற்றிய மேலும் விவரங்களுக்கு, http://www.redhat.com/apps/support/in.html ஐ பார்க்கவும்.

நிறுவலின் போது பயன்படுத்தும் நிறுவல் எண் /etc/sysconfig/rhn/install-num இல் சேமிக்கப்படும். Red Hat Network னுடன் பதிவு செய்யும் போது, இந்த கோப்பினை தானாக வரையறுத்து அதற்கான சேய் தடங்களுடன் சந்தாப்படுத்த rhn_register ஆல் குறிப்பிடப்படும்.

புதிய RPM GPG புகுபதிவு குறியீடுகள்

ஒரு புதிய வெளியீடு புகுபதிவு குறியீடு Red Hat Enterprise Linux 5 தொகுப்புகளை துவக்க பயன்படுகிறது. ஒரு கணினியை முதல் முறை மேம்படுத்தும் போது, இந்த குறியீட்டை நிறுவ அறிவுறுத்தப்படும்.

புகுபதிவு குறியீடுகள் பின்வரும் கோப்புகளில் வழங்கப்படுகிறது:

  • /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-redhat-release — புதிய வெளியீட்டின் புகுபதிவு குறியீட்டின் பொது குறியீட்டை கொண்டுள்ளது

  • /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-redhat-auxiliary — தற்போது பயனில் உள்ள, துணை வெளியீட்டு புகுபதிவு குறியீட்டின் பொது குறியீட்டை கொண்டுள்ளது

  • /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-redhat-former — Red Hat Enterprise Linuxஇன் பழைய வெளியீட்டில் முந்தையை வெளியீட்டு புகுபதிவு குறியீட்டின் பொது குறியீட்டை கொண்டுள்ளது

துணை பதிப்பு

Red Hat Enterprise Linux 5 இல், துணைபதிப்பு பதிப்பு கட்டுப்பாடு அமைப்பு Berkeley DB 4.3யுடன் இணைக்கப்பட்டுள்ளது. Red Hat Enterprise Linux 4யிலிருந்து மேம்படுத்தினால் ஏதாவது துணைபதிப்பு தொகுபதிவகங்கள் Berkeley DB பின்தளத்தில் பயன்படுத்தப்படும் கணினியில் உருவாக்கப்படும் "BDB" (தவிர சரியான கோப்பு முறைமை அடிப்படையான "FSFS" பின்புலம்), மேம்படுத்தப்பட்ட பின் சிறப்பு கவனம் தொகுபதிவகத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பணி Red Hat Enterprise Linux 5 மேம்படுத்துவதற்கு முன் Red Hat Enterprise Linux 4 கணினிகளுக்குப் பின்பற்றப்பட வேண்டும்:

  1. இயக்கத்தில் உள்ள பணிகளை பணி நிறுத்தம் செய்து தொகுபதிவகத்தில் ஒரு பணியும் இல்லை என்பதை உறுதி செய்யவும் (எடுத்துக்காட்டாக, httpd அல்லது svnserve; அல்லது எந்த உள்ளமை பயனர்களும் நேரடி அணுகலில் இருக்கும் போது).

  2. தொகுபதிவக பின் சேமிப்பை பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தி செய்யவும்:

    svnadmin dump /path/to/repository | gzip > repository-backup.gz
    
  3. svnadmin recover என்ற கட்டளையை தொகுபதிவகத்தில் இயக்கவும்:

    svnadmin recover /path/to/repository
    
  4. தொகுபதிவகத்தில் தேவையில்லாத பதிவு கோப்புகளை அழிக்கவும்:

    svnadmin list-unused-dblogs /path/to/repository | xargs rm -vf
    
  5. தொகுபதிவகத்தில் ஏதாவது மீதமுள்ள பகிரப்பட்ட-நினைவக கோப்பினை அழிக்கவும்:

    rm -f /path/to/repository/db/__db.0*
    

பிற நிறுவல் குறிப்புகள்

  • பிரித்து நிறுவல் ஊடகம் மூலம் Red Hat Enterprise Linux 5 ஐ நிறுவும் போது (எடுத்துக்காட்டாக, குறுவட்டு அல்லது NFSISO), ஒரு பிழை amanda-server ஐ நிறுவும் போது ஏற்பட்டது.

    நீங்கள் amanda-serverஐ பயன்படுத்த விரும்பினால், yumஐ பயன்படுத்தி Red Hat Enterprise Linux 5 ஐ நிறுவிய பின் நிறுவ வேண்டும்.

    பிரிக்காத ஊடகத்தை பயன்படுத்தும் போது இந்த சிக்கல் நிறுவலை பாதிக்காது என்பதை குறித்து கொள்ளவும் (எடுத்துக்காட்டாக, டிவிடி அல்லது NFS கிளை நிறுவல்கள்).

  • IDE/PATA (Parallel ATA) சாதனங்கள் "100% Native" முறையில் கட்டமைப்பட்டால், சில BIOSகள் Red Hat Enterprise Linux 5 நிறுவல் பணியை முழுவதும் முடிப்பதை தடுக்கலாம். இதனை தடுக்க IDE/PATA முறையை "Legacy" என BIOS இல் கட்டமைக்கவும்.

  • IBM System z ஒரு மரபார்ந்த யுனிக்ஸ் தோற்ற பருநிலை பணியகத்தை வழங்காது, எனினும் IBM System zக்கு Red Hat Enterprise Linux 5 firstboot செயல்பாட்டில் துவக்க நிரலை ஏற்றும் போது துணைபுரியாது.

    சரியாக IBM System z இல் Red Hat Enterprise Linux 5 ஐ துவக்க , நிறுவலுக்கு பின் பின்வரும் கட்டளைகளை இயக்கவும்:

    • /usr/bin/setupsetuptool தொகுப்பால் வழங்கப்படுகிறது

    • /usr/bin/rhn_registerrhn-setup தொகுப்பால் வழங்கப்படுகிறது

  • நிறுவலின் போது, அனகோண்டா தானாக கர்னல் தொகுப்புகளை நிறுவ தேர்வு செய்யப்படும். முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்னல் Red Hat Enterprise Linux 5 ஐ 4GB க்கும் அதிகமான ரேம்மை கண்டறிய அனுமதிக்காது. எனினும் உங்கள் கணினி 4GB ரேமுக்கும் அதிகமாக கொண்டிருந்தால், நீங்கள் kernel-PAE மாறியை கர்னலை நிறுவிய பின் நிறுவ வேண்டும்.

    ஒரு மெய்நிகர் நிறுவல் நடைபெறும் போது இதனை செயல்படுத்த முடியாது.

  • அனகோண்டாவை PXE உடன் ksdevice=bootif என்ற அளவுருவை பயன்படுத்தி துவக்கும் போது, நிறுவலின் போது நீங்கள் ஈத்தர்நெட் முகப்புக்கு தெரிவிக்கப்படுவீர்கள். ஒரே ஒரு ஈத்தர்நெட் சாதனம் மட்டும் நுழைக்கப்பட்டிருந்தால், அதற்கு பதிலாக ksdevice=link அளவுருவை பயன்படுத்தவும். மாற்றாக, நீங்கள் முகப்பை கைமுறையாக பயன்படுத்தலாம்.

தொழில்நுட்ப முன்பார்வைகள்

தொழில்நுட்ப முன்பார்வை வசதிகள் தற்போது Red Hat Enterprise Linux 5 சந்தா சேவையின் கீழ் துணைபுரியவில்லை, இது முழுவதும் செயல்படவில்லை மற்றும் தயாரிப்புக்கு இது பொதுவாக பொருந்துவதில்லை. எனினும், இந்த வசதிகள் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தவும் பரந்த அளவில் பயன்படுத்தவும் சேர்க்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த வசதி தயாரிப்பில்லாத சூழலில் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறிவார்கள். மேலும் இது முழுவதுமாக துணைபுரியாமல் தொழில்நுட்ப முன்பார்வையாக இருக்கும் போதே வாடிக்கையாளர் தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். அதிக முக்கியதுவமான சிக்கல்களுக்கு பிழைத்திருத்தங்கள் வழங்கப்படும்.

தொழில்நுட்ப முன்பார்வையின் முழு வளர்ச்சியிலும், அதன் கூடுதல் கூறுகள் பொதுவாக சோதனை செய்ய கிடைக்கும். இது இனிவரும் சிறிய அல்லது பெரிய வெளியீடுகளில் தொழில்நுட்ப முன்பார்வைக்கு முழு துணைபுரிவது Red Hat இன் உள்நோக்கமாகும்.

நிலையற்ற லினக்ஸ்

நிலையற்ற லினக்ஸுக்கு அமைப்பு தொகுதிகளை செயல்படுத்த Red Hat Enterprise Linux 5 இன் வெளியீடு கொண்டுள்ளது. நிலையற்ற லினக்ஸ் என்பது ஒரு கணினி எவ்வாறு இயங்கி, மேலாண்மை செய்யப்படுகிறது, எளிய வாய்ப்பளித்தலுக்கு வடிவமைத்தல் மற்றும் எளிமையாக பல கணினிகளை மாற்ற மேலாண்மை செய்தல் என்பது போன்ற புதிய எண்ணங்களை கொண்டுள்ளது. இது தயாரிக்கப்பட்ட எழுதும் கோப்புகளை குறுவட்டில் எழுத அதிக அளவு நிலையற்ற கணினிகள் மேலாண்மை செய்ய இயக்கத்தளத்தை வாசிப்பு-மட்டும் முறையில் இயங்குவது இதன் முதல் கட்ட பணியாகும் (மேலும் விவரங்களுக்கு, /etc/sysconfig/readonly-root ஐ பார்க்கவும்).

இதன் நடப்பு நிலை வளர்ச்சியில், நிலையற்ற வசதி உள்ளிடப்பட்ட இலக்குகளின் துணை அமைப்புகளாகும். அதே போல, தொழில்நுட்ப முன்பார்வை நிலை என அதன் செயல்திறன் பெயரிடப்பட்டுள்ளது.

பின்வருவன Red Hat Enterprise Linux 5 இல் சேர்க்கப்பட்டுள்ள துவக்க செயல்திறன்களின் பட்டியலாகும்:

  • NFS மீது ஒரு நிலையற்ற உருவை இயக்குகிறது

  • NFS மீது ஒரு நிலையற்ற உருவை சுற்றுப்பாதை வழியாக இயக்குகிறது

  • iSCSI இல் இயங்குகிறது

http://fedoraproject.org/wiki/StatelessLinuxHOWTOஇல் நிலையற்ற குறியீடு படிப்பினை எவ்வாறு சோதிக்க வேண்டும் என்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் stateless-list@redhat.comஇல் சேரவும்.

GFS2

GFS2 GFS கோப்பு முறையில் கூடுதல் பரிணாமம் அடிப்படையானதாகும். இது முழுமையாக செயல்பட்டாலும், GFS2 இது முழுமையாக எடுத்து கொள்ளப்படவில்லை. GFS2 Red Hat Enterprise Linux 5 இன் அடுத்த மேம்படுத்தலில் முழு துணைபுரியும் நிலையுடன் இலக்கிடப்படுகிறது. மேலும் in-place மாற்றும் வசதி gfs2_convert , GFS கோப்பு முறைமையின் மெட்டா தரவுகளை மேம்படுத்தி, GFS2 கோப்பு முறைமையாக மாற்றும்.

FS-Cache

FS-Cache என்பது தொலை கோப்பு முறைமைகளுக்கு உள்ளமை இடையக வசதியாகும்; இது பயனர்களை NFS தரவுகளை உள்ளமைவாக ஏற்றப்பட்ட வட்டில் இடையகம் செய்ய அனுமதிக்கிறது. FS-Cache வசதியை அமைக்க, cachefilesd RPM ஐ நிறுவி /usr/share/doc/cachefilesd-<version>/README இல் உள்ள தகவல்களை பார்க்கவும்.

<version>ஐ நிறுவப்பட்ட cachefilesd தொகுப்பின் தொடர்புடைய பதிப்பால் மாற்றவும்.

Compiz

Compiz என்பது ஒரு OpenGL அடிப்படையான கலவையான சாளர மேலாளர். சாதாரண சாளர மேலாண்மையின் கூடுதலாக, compiz கலவை மேலாளராக செயல்புரியும் மற்றும் இந்த செயலில், எளிமையான மற்றும் முழுமையான பணிமேடை அனுபவத்தை கொடுக்க ஒருங்கிணைக்கிறது.

Compiz முப்பரிமாண வன்பொருள் முடுக்கத்தை பயன்படுத்தி குறும்பட சாளரங்கள் மற்றும் சாளர நிழல்கள், உயிராக்க சாளர குறுக்கம் மற்றும் மெய்நிகர் பணிமேடைகளுக்கிடையேயான ஜாலங்கள் போன்ற தோற்றங்களை சரி செய்கிறது.

நடப்பு ஒழுங்கமைவு வடிவமைப்பில் சில வரையறையால், compiz OpenGL பயன்பாடுகள் அல்லது Xv விரிவாக்கம் உள்ள பயன்பாடுகளில் சரியாக பணிபுரியாது. அந்த பயன்பாடுகள் பாதிப்பில்லாத ஒழுங்கமைவு சிக்கல்களை கொண்டிருக்கும் அதனால் இந்த வசதி தற்போது துணைபுரிவதில்லை. இதனால் compiz தற்போது தொழில்நுட்ப முன்பார்வையாக உள்ளது

Ext3க்கான விரிவாக்கம்

Red Hat Enterprise Linux 5 இல், EXT3 கோப்பு முறைமை கொள்ளளவு 16TBஇல் அதிகபட்சமாக 8TB க்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. இந்த செயல்திறன் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் இது Red Hat Enterprise Linux 5இன் வரும் வெளியீட்டுக்கு முழு துணையை கொடுக்க இலக்காக வைக்கப்படுகிறது.

AIGLX

AIGLX என்பது தொழில்நுட்ப முன்பார்வை வசதியாகும் அல்லது இது X serverக்கு முழு துணைபுரியும். இதன் நோக்கம் GL-accelerated தோற்றங்களை தரப்படுத்தப்பட்ட பணிமேடைகளில் செயல்படுத்துவதாகும். இந்த திட்டம் பின்வருவனவற்றை கொண்டுள்ளது:

  • சிறிது மாற்றப்பட்ட X server

  • ஒரு மேம்படுத்தப்பட்ட மீசா தொகுப்பு ஒரு புதிய நெறிமுறை துணையை சேர்க்கிறது

இந்த கூறுகளை நிறுவினால், நீங்கள் GL-accelerated தோற்றங்களை மிகச் சில மாற்றங்களுடன் பணிமேடை தோன்றும், மேலும் உங்கள் X server ஐ மாற்றாமல் இதனை செயல்படுத்த அல்லது செயல்நீக்க முடியும். AIGLX ம் தொலை GLX பயன்பாடுகளை செயல்படுத்திவன்பொருள் GLX முடுக்கத்தில் பயன்படுத்தலாம்.

Frysk GUI

frysk திட்டத்தின் நோக்கம், மென்பொருள் உருவாக்குபவர்கள் மற்றும் கணினி நிர்வாகிகளுக்கு ஒரு அறிவார்ந்த, பகிரப்பட்ட, எப்போதும் கணினியை கண்காணித்தல் மற்றும் பிழைத்திருத்த கருவிகளை உருவாக்க பின்வருமாறு அனுமதிக்கிறது:

  • இயங்கும் பணிகள் மற்றும் த்ரட்களை கண்காணித்தல் (உருவாக்குதல் மற்றும் அழித்தல் நிகழ்வுகள் உள்ளடக்கியது)

  • பூட்டும் கட்டளைகளின் பயனை கண்காணிக்கவும்

  • வெளிப்படும் deadlockகள்

  • தரவை சேகரித்தல்

  • ஒரு பட்டியலிலிருந்து ஏதாவது கொடுக்கப்பட்ட பணியை பிழைத்திருத்தம் செய்யவும் அல்லது fryskஐ ஒரு பணியில் அழிக்கப்படும் அல்லது தவறாக பழகும் ஒரு மூல நிரலாக்க (அல்லது வேறு) சாளரத்தை திறக்க அனுமதிக்கிறது

Red Hat Enterprise Linux 5 இல் frysk வரைகலை பயனர் முகப்பு ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாகும், ஆனால் frysk கட்டளை வரி முகப்பில் முழுவதும் துணைபுரிகிறது.

Systemtap

Systemtap இலவச மென்பொருள் (GPL) அமைப்பை இயங்கும் லினக்ஸ் கணினி பற்றிய தகவல்களை சேகரிக்க கொடுக்கிறது. இது செயல்திறன் அல்லது செயல்பாட்டு சிக்கல்களை கண்டறிய துணைபுரிகிறது. systemtap இன் உதவியால், மென்பொருளாளர்கள் மறு மொழிபெயர்த்தல், நிறுவுதல் மற்றும் மறுதொடக்க வரிசையை பின்பற்ற வேண்டாம் அல்லது தரவுகளை சேகரிக்க வேண்டிய வரும்.

Dogtail

Dogtail என்பது பைத்தானில் கணி மொழியில் எழுதப்பட்ட ஒரு GUI சோதனை கருவி மற்றும் தானியக்க சட்ட பணியாகும், இது Accessibility தொழில்நுட்பத்தால் பணிமேடை பயன்பாடுகளுடன் தொடர்பு கொள்கிறது.

இந்திய மொழிகள் மற்றும் சிங்களத்திற்கு துணை புரிதல்

Red Hat Enterprise Linux 5 ம் பின்வரும் மொழிகளுக்கு தொழில்நுட்ப முன்பார்வைக்கு துணைபுரிகிறது:

  • அசாமி

  • கன்னடம்

  • சிங்களம்

  • தெலுங்கு

இந்த மொழிகளின் துணைபுரிதலை எவ்வாறு நிறுவி மற்றும் செயல்படுத்த வேண்டும் என்பது பற்றிய மேலும் விவரங்களுக்கு, இந்த ஆவணத்திலுள்ள சர்வதேசமயமாக்கல் என்பதை பார்க்கவும்.

dm-multipath சாதனங்களுக்கு நிறுவுதல்

அனகோண்டா இப்போது dm-multipath சாதனங்களில் கண்டறிதல், உருவாக்குதல் மற்றும் நிறுவலை செய்கிறது. இந்த வசதியை செயல்படுத்த mpath அளவுருவை கர்னல் துவக்க வரியில் சேர்க்கவும்.

ஒரு சாதனத்தின் major:minor எண் மாற்றப்பட்டால், mpath அளவுரு துவக்க முடியாமல் போகும் என்பதை குறித்து கொள்ளவும். இந்த சிக்கல் Red Hat Enterprise Linux 5 இன் எதிர்கால மேம்படுத்தலில் அறிக்கையிடப்படும்.

நிறுவல் / iSCSI மென்பொருள் துவக்கிக்கு துவக்கவும் (open-iscsi)

அனகோண்டா இப்போது iSCSI சாதனத்தில் நிறுவுவதற்கான திறனை கொண்டுள்ளது. துவக்குதல் மற்றும் நிறுவுதல் QLogic qla4xxx வன்பொருள் துவக்கியால் முழுவதும் துணைபுரிகிறது. எனினும், open-iscsi மென்பொருள் துவக்கிக்கு iSCSI சாதனத்தில் நிறுவுவது தற்போது தொழில்நுட்ப முன்பார்வையாக பின்வரும் சிக்கலால் எடுத்துக்கொள்ளப்படுகிறது:

  • உரை முறை நிறுவல் முடியவில்லை. நீங்கள் வரைகலை நிறுவல் அல்லது ஒரு தானியக்க கிக்ஸ்டார்ட் நிறுவலை செய்ய வேண்டும்.

  • ஊடகம் அடிப்படையான நிறுவல்கள் முடியவில்லை, நீங்கள் பிணைய அடிப்படையான நிறுவலை செய்ய வேண்டும்.

  • நேர நிகழ்வுகளை பொருத்து, அனகோண்டா அனைத்து iSCSI இலக்குகள் அல்லது LUNகளை கண்டறிய முடியாமல் இருக்கலாம். இது ஏற்படும் போது, நிறுவல் ஷெல்லை பயன்படுத்தி iSCSI கட்டளை வழியாக சேமிப்பகத்தை கட்டமைக்கவும்.

  • iscsid டீமான் சரியாக ஆரம்பிக்கப்படாது. இந்த நிகழ்வு அனைத்து iSCSI பிழைகளையும் கையாளுவதிலிருந்து தடுக்கிறது, அதாவது பிணைய சிக்கல்கள், SCSI/iSCSI நேர முடிதல் மற்றும் இலக்கு பிழைகள். iscsid டீமான் இயங்குவதை உறுதிப்படுத்த. iscsiadm -m session -i ஐ இயக்கி இந்த வரியை சரி பார்க்கவும், Internal iscsid Session State: ஒரு மதிப்பை அறிக்கையிடுகிறது (அது எந்த மதிப்பாகவும் இருக்கலாம்).

  • சில iSCSI இலக்கு செயல்படுத்தலில், கணினியை பணிநிறுத்தும் போது செயலிழக்கப்படும்.

  • சில iSCSI இலக்கு செயல்படுத்தலில், மறுதுவக்கத்தின் போது கணினி செயலிழக்கப்படும். இதனை தவிர்க்க, கணினியை பணி நிறுத்தம் செய்து கணினியை மீண்டும் துவக்கவும் (அமர்விலிருந்து நேரடியாக மறு துவக்கம் செய்யாமல்).

  • iSCSI சாதனங்களிலிருந்து துவக்குவது IBM System p இல் சரியாக வேலை செய்யாது. ஒரு iSCSI சாதனத்தில் நிறுவும் போது சரியாக இருக்கும் ஆனால் சரியாக துவங்காது.

  • நிறுவலுக்கு பின் முதல் துவக்கத்தில், நீங்கள் SELinux பிழைகளான பின்வருவனவற்றை பெறவீர்கள்:

    kernel: audit(1169664832.270:4): avc:  denied  { read
    } for  pid=1964 comm="iscsid" 
    

    இதில் பணிபுரிய, கர்னல் அளவுருவான enforcing=0 ஆல் கணினியை துவக்கவும். கணினி ஒழுங்காக துவக்கப்பட்டதும் setenforce 1ஐ பயன்படுத்தி வலியுறுத்தும் முறைக்கு மறு சேமிக்கவும்.

இந்த வரம்புகள் Red Hat Enterprise Linux 5 இன் எதிர்கால மேம்படுத்தலில் அறிக்கையிடப்படும்.

தெரிந்த பிரச்சனைகள்

  • புரவலன் வட தகவிகள் MegaRAID இயக்கியை பயன்படுத்துவது "Mass Storage" போட்டியிடும் முறையில் செயல்பட அமைக்கப்பட வேண்டும், "I2O" போட்டியிடும் முறையில் வேண்டாம். இதனை செய்ய பின்வரும் படிநிலைகளை செய்யவும்:

    1. MegaRAID BIOS Set Up Utilityஐ உள்ளிடவும்.

    2. தகவி அமைவுகள் பட்டியை உள்ளிடவும்.

    3. வேறு தகவி விருப்பங்கள் கீழ், Emulation ஐ தேர்ந்தெடுத்து Mass Storage க்கு அமைக்கவும்.

    தகவி "I2O" போட்டியிடுவதில் தவறாக அமைக்கப்பட்டால், கணினி i2o இயக்கியை ஏற்ற முயற்சிக்கும். இது செயலிழக்கப்பட்டு, சரியான இயக்கியை ஏற்றாமல் தடுக்கும்.

    முந்தைய Red Hat Enterprise Linux வெளியீடு பொதுவாக I20 இயக்கியை MegaRAID இயக்கி ஏற்றுவதற்கு முன் ஏற்ற முயற்சிக்காது. அதுபோல, லினக்ஸில் பயன்படுத்தும் போது வன்பொருள் எப்போதும் "Mass Storage" போட்டியிடும் முறையில் அமைக்கப்பட வேண்டும்.

  • vcpus=2உடன் கட்டமைக்கப்பட்ட முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினரை நிறுவும் போது, முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர் காரணமே இல்லாமல் துவக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

    இதில் பணிபுரிய, மெதுவாக துவங்கும் விருந்தினரை அழிக்க xm destroy <guestid> இந்த கட்டளையை பயன்படுத்தி பின் xm create <guest id> ஐ பயன்படுத்தி அதே விருந்தினரை துவக்கவும்.

  • Red Hat Enterprise Linux 5 openmpi-1.1.1-4.el5 ஐ சேர்க்கிறது (OFED 1.1 பகிர்தலிலிருந்து), இது வேலை செய்வதிலிருந்து முழுவதுமாக வெளியேறுகிறது. இது openmpi ஸ்டேக் வேலை செய்தவுடன் எதிர்பார்க்கப்பட்ட நேர விகிகத்தில் மாறுகிறது.

    openmpi இன் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளுக்கு, http://people.redhat.com/dledford/Infiniband/openmpi ஐ பார்க்கவும்

  • Windows Server 2003 ஐ விருந்தினராக முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட Red Hat Enterprise Linux 5 இல் நிறுவினால் கணினி முதல் நிலை நிறுவல் முடிந்தவுடன் எதிர்பாரதவிதமாக முடிவுறும். இது நிகழும் போது, வரைகலை பணியக சாளரம் மூடி விருந்தினர் Virtual Machine Managerஇன் பட்டியல் கணினியில் இல்லாமல் போகும், அதன் முடிவாக Broken pipe பிழை ஏற்படும்.

    இந்த சிக்கல் Red Hat Enterprise Linux 5 இன் இனிவரும் மேம்படுத்தில் சரி செய்யப்படும். இதில் பணிபுரிய, முனையத்தில் பின்வரும் கட்டளையை பயன்படுத்தவும்:

    xm create /etc/xen/<name of guest machine>

    பின்னர், மெய்நிகர் கணினியை திறக்கவும்.

  • முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட Windows Server 2003 ஐ குறுவட்டு / டிவிடி மூலம் உருவாக்க முயற்சிக்கும் போது, விருந்தினரின் இரண்டாம் நிலை நிறுவல் மறுதுவக்கும் போது தொடராது.

    இதில் பணிபுரிய, /etc/xen/<name of guest machine> குறுவட்டு / டிவிடி சாதனங்களுக்கு சரியாக சேர்ப்பது மூலம் திருத்தவும்.

    ஒரு நிறுவலில் மெய்நிகர் சாதனமாக ஒரு சாதாரண கோப்பு பயன்படுத்தப்பட்டால், disk வரி /etc/xen/<name of guest machine> பின்வருமாறு வாசிக்கப்படும்:

    disk = [ 'file:/PATH-OF-SIMPLE-FILE,hda,w']
    

    ஒரு டிவிடி-ரோம் சாதனம் /dev/dvd இல் புரவலனாக இருப்பது நிலை 2 நிறுவலில் hdc இருக்கும் அதனை உள்ளீடு 'phy:/dev/dvd,hdc:cdrom,r' போல சேர்க்க வேண்டும். அதுபோல, வட்டு வரி பின்வருமாறு வாசிக்கப்பட வேண்டும்:

    disk = [ 'file:/opt/win2003-sp1-20061107,hda,w', 'phy:/dev/dvd,hdc:cdrom,r']
    

    உங்கள் வன்பொருளை பொருத்து பயன்படுத்தும் சாதன பாதை மாற்றப்படுகிறது.

  • rmmod xennet ஆனது domUஐ அழிக்கும்; இது மெய்நிகராக்க வசதியில் வழங்கப்பட்ட அட்டவணையால் ஏற்படுகிறது. தற்போது மெய்நிகராக்க வசதியில் வழங்கப்பட்ட அட்டவணை செயல்பாடுகளை செய்ய முடியாததால், xennet தொகுதியை விருந்தினர்களில் இறக்குவது பாதுகாப்பானது அல்ல. இந்த சமயங்களில் வழங்கப்பட்ட அட்டவணைகள் பின் - முன் தள தொடர்புகளை செய்ய பயன்படுகிறது, இதில் பின்தளம் குறிப்புகளை வெளியிடும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது.

    இந்த சிக்கல் அடுத்த Red Hat Enterprise Linux 5இன் சிறிய வெளியீட்டில் சரி செய்யப்படும். தற்போது, விருந்தினரில் பயனர்கள் xennet தொகுதியை இறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • ethtool eth0 ஐ இயக்குவது ஈத்தர்நெட் அட்டையை பற்றி முழுமையில்லாத தகவலை கொடுக்கிறது. இது மெய்நிகராக்கப்பட்ட கர்னலில் மட்டுமே ஏற்படுகிறது, மெய்நிகராக்க வசதி ஒரு பிணைய அமைவை பயன்படுத்துவதால், பருநிலை ஈத்தர்நெட் சாதனம் peth0 ஆக அடையாளப்படுத்தப்படுகிறது. எனினும், பருநிலை ஈத்தர்நெட் சாதனம் பற்றிய சரியான தகவலை பெற ethtool peth0 ஐ பயன்படுத்த வேண்டும்.

  • Red Hat Enterprise Linux 5 ஐ nVidia CK804 சிப்செட் கொண்ட கணினிகளில் பயன்படுத்தும் போது, பின்வருவது போல கர்னல் செய்தி பெறப்படும்:

    kernel: assign_interrupt_mode Found MSI capability
    kernel: pcie_portdrv_probe->Dev[005d:10de] has invalid IRQ. Check vendor BIOS
    

    இந்த செய்திகள் சில PCI-E துறைகள் IRQகளுக்கு கோரப்படுவதில்லை என குறிப்பிடுகிறது. எனினும், இந்த செய்திகள் எப்போதும் கணினியின் செயல்பாட்டை பாதிப்பதில்லை.

  • சில Cisco Aironet வடமில்லா சாதனங்கள் NetworkManager இல் வடமில்லா பிணையங்களின் இணைப்பு விவரங்களை சேமித்து ஒரு SSID ஒலிபரப்ப தடுக்கிறது. இது ஒரு Cisco Aironet வடமில்லா சாதன வரையறை மூலம் நடைபெறுகிறது.

  • Cisco Aironet MPI-350 வடமில்லா அட்டையை கொண்ட மடிக்கணினிகள் ஒரு DHCP முகவரியை பிணைய அடிப்படையான நிறுவலில் வடமுள்ள ஈத்தர்நெட் துறையை பயன்படுத்தும் போது செயலிழக்கப்படுகிறது.

    இதில் பணிபுரிய, உங்கள் நிறுவலில் உள்ளமை ஊடகத்தை பயன்படுத்தவும். மாற்றாக, நீங்கள் வடமில்லா அட்டையை மடிக்கணினி BIOS இல் நிறுவலுக்கு முன் செயல்நீக்கலாம் (நிறுவல் முடிந்தவுடன் மீண்டும் வடமில்லா அட்டையை செயல்படுத்தலாம்).

  • தற்போது, system-config-kickstart தொகுப்பு தேர்ந்தெடுத்தல் மற்றும் நீக்குதல் போன்றவற்றுக்கு துணைபுரிவதில்லை. system-config-kickstartஐ பயன்படுத்தும் போது, Package Selection விருப்பம் செயல்நீக்கத்தில் உள்ளது என குறிப்பிடுகிறது. ஏனெனில், system-config-kickstart yum ஐ பயன்படுத்தி குழு தகவல்களை பெறுகிறது, ஆனால் அது yumஐ கட்டமைக்க முடியாமலும், Red Hat Network உடன் இணைக்க முடியாமல் உள்ளது.

    இந்த சிக்கல் Red Hat Enterprise Linux 5 இன் அடுத்த சிறிய வெளியீட்டில் சரி செய்ய ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது, நீங்கள் கைமுறையாக கிக்ஸ்டார்ட் கோப்புகளை தொகுப்பு பிரிவில் மேம்படுத்த வேண்டும். system-config-kickstart ஐ பயன்படுத்தி கிக்ஸ்டார்ட் கோப்பினை திறக்கும் போது, அது அனைத்து தொகுப்பின் தகவலையும் பாதுகாத்து, நீங்கள் சேமிக்கும் போது அதனை எழுதுக்கொள்ளும்.

  • SATA கட்டுப்படுத்திகள் கொண்ட கணினிகள் துவக்கும் போது இடைநிறுத்தப்பட்டு, பின்வரும் பிழை செய்தியை காட்டுகிறது:

    ata2: port is slow to respond, please be patient
    

    பின்னர், பின்வரும் பிழை செய்தி தோன்றும்:

    ata2: reset failed, giving up
    

    இரண்டாவது பிழை செய்திக்கு பின், கணினி சாதாரண துவக்க முறையை மேற்கொள்ளும். இடைவெளி தவிர, கணினியில் எந்த பாதிப்பும் இருக்காது; SATA இயக்கிகள் இருப்பதால் அவை சரியாக கண்டறியப்பட வேண்டும்.

  • 4-சாக்கெட் AMD Sun Blade X8400 Server Module கணினிகள் நினைவகம் node 0 இல் கட்டமைக்கப்படாமல் துவக்கும் போது சிக்கலாகிறது. கர்னல் பீதியை தடுக்க கணினிகளின் node 0 இல் நினைவகம் கட்டமைக்கப்பட வேண்டும்.

  • LVM பிரதிபலிப்பு சாதனங்களுக்கு அனகோண்டா மூலம் நிறுவுதல் தற்போது துணைபுரியவில்லை. இந்த திறன் Red Hat Enterprise Linux 5 இன் எதிர்கால மேம்படுத்தலில் சேர்க்கப்படும்.

  • Red Hat Enterprise Linux 5ஐ NFS சேவையகத்திலுள்ள ஒரு அடைவில் Red Hat Enterprise Linux ISO உருக்கள் மூலம் நிறுவும் போது, அனகோண்டா பின்வரும் பிழை செய்தியை காட்டலாம்:

    metadata தொகுப்பை வாசிக்க முடியவில்லை. ஏனெனில் repodata அடைவு விடுபட்டுள்ளது. 
    உங்கள் நிறுவல் கிளை சரியாக உருவாக்கப்பட்டுள்ளதா என உறுதிபடுத்தவும்.
    தொகுபதிவகத்திற்கு repomd.xml கோப்பினை திறக்க/வாசிக்க முடியாது:
    

    அடைவு ISO உருக்கள் மற்றும் பகுதி பிரிக்கப்படாத நிறுவல் கிளையை கொண்டிருந்தால் இந்த சிக்கல் ஏற்படும் (எடுத்துக்காட்டாக, /images அடைவு முதல் ISO இலிருந்து). இதில் உள்ள அடைவுகள் மேலே குறிப்பிட்ட பிழைகளை கொண்டிருக்கும்.

    இந்தப் பிழையை தவிர்க்க, அடைவில் ISO உருக்களை மட்டும் கொண்டுள்ள கிளைகளை தொகுப்பு நீக்கவும்.

  • துவக்க நேரம் /var/log/boot.log க்கு புகுபதிவு செய்வது இந்த Red Hat Enterprise Linux 5 வெளியீட்டில் இல்லை. இதற்கு சமமான செயல்பாடு எதிர்கால Red Hat Enterprise Linux 5 மேம்படுத்தலில் சேர்க்கப்படும்.

  • kexec அல்லது kdump accraid கட்டுப்படுத்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வட்டுகளுடன் சேமிக்கப்படவில்லை.

    இந்த சிக்கலில் பணிபுரிய, scp ஐ பயன்படுத்தி பிணையத்தில் சேமிக்கவும். மாற்றாக, வேறு கட்டுப்படுத்தி மூலம் வட்டில் சேமிக்கலாம்.

  • IBM T43 மடிக்கணினிகளை டாக்கிங் ஸ்டேஷனில் Dell திரையகத்துடன் பயன்படுத்தும் போது, துவக்கத்தில் மடிக்கணினி மற்றும் இரண்டாவது திரை காட்சி இரண்டும் தவறான திரைத்திறனை கொடுக்கும்.

    இதனை இனிவரும் புகுபதிவுகளில் இருந்து தடுக்க பின்வரும் படிநிலைகளை செய்யவும்:

    1. Display settings பட்டியை system-config-display ஐ பயன்படுத்தி திறக்கவும்.

    2. Dual head தத்தலை சொடுக்கவும்.

    3. Use dual head ஐ சரிபார்த்து இரண்டாவது திரையகத்திற்கு சரியான கட்டமைப்பை உள்ளிடவும்.

    4. கணினியை மீண்டும் துவக்கவும்.

  • பிரிப்பு நிறுவல் ஊடகத்தை பயன்படுத்தி முழு மெய்நிகராக்க விருந்தினரை நிறுவும் போது, குறிப்பாக பல குறுவட்டுகளை நிறுவல் குறுவட்டுக்களுக்கிடையே மாற்றும் போது செயலிழக்கப்படலாம். விருந்தினர் இயக்கத்தள நிறுவல் பணியின் போது, பயனர்கள் நிறுவல் குறுவட்டுகளை வெளியே எடுக்க அல்லது ஏற்ற தடுக்கப்படும், இது நிறுவலை முடிப்பதிலிருந்து தடுக்கிறது

    எனினும், நீங்கள் QEMU திரையக பணியகத்தை குறுவட்டு உருக்களுக்கு மாற்ற விருந்தினர் இயக்கத்தள நிறுவல் பணியில் பயன்படுத்தி பரிந்துரைக்கப்படுகிறது. இதன் செயல்முறை பின்வருமாறு:

    1. ஒரு வரைகலை VNC பணியகத்தை விருந்தினர் இயக்கத்தளத்திற்கு திறக்கவும்.

    2. விருந்தினர் இயக்கத்தளத்தில் குறுவட்டு இயக்கியை ஏற்றம் நீக்கவும்.

    3. Ctrl-Alt-2 ஐ அழுத்தி QEMU திரையக பணியகத்திற்கு மாற்றவும்.

    4. eject hdc கட்டளையை இயக்கவும்.

    5. இந்த கட்டளையை இயக்கவும் change hdc <path to the CD-ROM in host system>.

    6. Ctrl-Alt-1 ஐ அழுத்தி விருந்தினர் இயக்கத்தள பணியகத்திற்கு வரவும்.

    7. விருந்தினர் இயக்கத்தளத்தில் குறுவட்டு இயக்கியை ஏற்றவும்.

    ஒரு இயல்பான VNC கிளையனை புரவலன் X server இல் பயன்படுத்தும் போது, சில சிக்கல்கள் Ctrl-Alt-2 மற்றும் Ctrl-Alt-1 கட்டளைகளில் உள்ளது. இதில் பணிபுரிய, virt-manager இல், ஒட்டும் விசைகளை பயன்படுத்த வேண்டும். Ctrl ஐ மூன்று முறை அழுத்தும் போது இதனை "ஒட்டுதலாக" அடுத்த மாறுதலை அழுத்தும் வரும் வரை இருக்கும். எனினும், Ctrl-Alt-1 ஐ அனுப்ப, Ctrl ஐ இருமுறை அழுத்தும் முன் Ctrl-Alt-1 ஐ அழுத்த வேண்டும்.

  • Red Hat Enterprise Linux 5 Driver Update Model மாற்றப்பட்ட initrd உருக்களை kmod தொகுப்பு bootpath-மாற்றும் இயக்கி நிறுவப்படும் போதெல்லாம் சேர்க்கப்படும். இந்த நேரத்தில், பின்சேமிப்பின் initrd உருக்களின் எண்ணிக்கை /boot பகிர்வை விரைவாக நிறைக்கும், குறிப்பாக, கணினி அளவுள்ள இயக்கிகளின் மேம்படுத்தல்களின் எண்ணிக்கைக்கு செல்லும் போது.

    எனினும், நீங்கள் ஒழுங்காக இயக்கியை மேம்படுத்தினால், /boot பகிர்வில் வெற்று இடத்தை கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பழைய initrd உருக்களை நீக்குவது மூலம் /boot இல் வெற்று இடத்தை உருவாக்கலாம்; இந்த கோப்பு .img0, .img1, .img2, என தொடர்ந்து முடியும்.

  • நீக்கக்கூடிய ஊடகத்தில் தற்போது தானிக்க இயக்கம் செயல் நீக்கப்பட்டுள்ளது. Red Hat Enterprise Linux துணை குறுவட்டிலிருந்து தொகுப்புகளை நிறுவ, பின்வரும் கட்டளையை பயன்படுத்தி குறுவட்டு நிறுவியை கைமுறையாக துவக்கவும்:

    system-cdinstall-helper /media/path-to-mounted-drive

  • Red Hat Enterprise Linux 4 லிலிருந்து Red Hat Enterprise Linux 5 க்கு ஏற்றும் போது, வரிசைப்படுத்தல் கையேடு தானாக நிறுவப்படுவதில்லை. நீங்கள் pirut ஐ பயன்படுத்தி மேம்படுத்தல் முடிந்ததும் கைமுறையாக நிறுவ வேண்டும்.

  • ஒரு autofs பிழை நன்றாக வேலை செய்வதிலிருந்து பல ஏற்றுதல்களை தடுக்கிறது.

    முடிவுறும் போது, கடைசி பல ஏற்ற கூறுகள், மற்ற கூறுகள் பணியில் இருக்கும் போது ஏற்றம் தொடர்பாக இல்லாத போது சரி பார்க்கப்படும், autofs பல ஏற்றத்தை முடிவுற்றதாக பிழையாக வரையறுக்கும். இது பல ஏற்றத்தைப் பகுதி முடிவுற்றதாக்கும், அதன் முடிவு இனி வரும் ஏற்ற கோரிக்கைகளுக்கு பதிலாளிப்பதாக இருக்காது.

    இந்த சிக்கலை நிரந்தரமாக தீர்க்க, autofsyum update autofs என்ற கட்டளையை பயன்படுத்தி மேம்படுத்தவும்.

  • X இயக்கத்தில் இருந்து vesa தவிர வேறு இயக்கியை பயன்படுத்தி இருந்தால், kexec/kdump கர்னல் கணினி மறுதுவக்கம் செய்யாமல் இருக்கலாம். இந்த சிக்கல் ATI Rage XL வரைகலை சிப்செட்டில் மட்டுமே உள்ளது.

    X ATI Rage XL உள்ள கணினியில் இயங்கும் போது, kexec/kdump இல் மறுதுவக்கம் செய்யும் போது சிக்கல் வராமல் இருக்க, அது vesa இயக்கியை கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

  • ஒரு boot.iso ஐ பயன்படுத்தி ஒரு NFS பங்கீட்டில் வாசிப்பு-எழுதும் முறையில் ஒரு முழு மெய்நிகராக்கப்பட்ட விருந்தினரை ஏற்றினால் அது சரியாக முடிக்காது. இந்த சிக்கலை தீர்க்க, NFS பங்கீட்டை வாசிப்பு மட்டும் என ஆக்கவும்.

    NFS பங்கீட்டை வாசிப்பு-மட்டும் என ஏற்ற முடியவில்லை எனில், boot.isoஐ உள்ளமை /var/lib/xen/images/ அடைவுக்கு நகலெடுக்கவும்.

பொதுவான தகவல்கள்

இந்தப் பிரிவு இந்த ஆவணத்திலுள்ள வேறு பிரிவுகளில் குறிப்பிடப்படாத பொதுவான தகவல்களை கொண்டுள்ளது.

Red Hat Enterprise Linux வரிசைப்படுத்தல் கையேடு

இந்த Red Hat Enterprise Linux இன் வெளியீடு வரிசைப்படுத்தல் கையேட்டை கொண்டுள்ளது. இதனை பெற, கணினி என்பதற்கு சென்று (மேல் பலகத்தில்) => ஆவணமாக்கம் => Red Hat Enterprise Linux வரிசைப்படுத்தல் கையேடு என்பதை பார்க்கவும்.

Red Hatஇன் நோக்கம் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்ட வரிசைப்படுத்தல் கையேட்டை அனைத்து துணைபுரியும் மொழிகளில் கொண்டு வருதே ஆகும். நீங்கள் வரிசைப்படுத்தல் கையேட்டில் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை நிறுவியிருந்தால் Red Hat Network வழியாக கிடைக்கும் புதிய பதிப்பை மேம்படுத்தி கொள்ள பரிந்துரைப்படுகிறது.

மெய்நிகராக்கம்

Red Hat Enterprise Linux 5 i686 மற்றும் x86-64க்கு Xen-சார்ந்த மெய்நிகராக்க திறன்களின் தொழில்நுட்ப முன்பார்வை வசதியை கொடுக்கிறது, மேலும் ஒரு மெய்நிகராக்க சூழலை மேலாண்மை செய்ய மென்பொருள் வடிவமைப்பு தேவைப்படுகிறது.

hypervisor அடிப்படையில் Red Hat Enterprise Linux 5இல் மெய்நிகராக்கத்தை செயல்படுத்துவதற்கு, இது மிக குறைந்த மெய்நிகராக்கத்தை பாரா மெய்நிகராக்கம் வழியாக வசதிப்படுத்துகிறது. Intel மெய்நிகராக்க தொழில்நுட்பம் அல்லது AMD AMD-V கொண்ட செயலிகளால், மெய்நிகராக்கம் Red Hat Enterprise Linux 5 ஆனது இயக்கத்தளங்களை மாற்றப்படாததை முழு மெய்நிகராக்க முறையில் இயக்க அனுமதிக்கிறது.

Xen மற்றும் பகுதி மெய்நிகராக்கப்பட்ட லினக்ஸ் கர்னல்களில், Red Hat Enterprise Linux 5 பின்வரும் வசதிகளையும் கொண்டுள்ளது:

  • Libvirt, ஒரு தொடர்ச்சியை கொடுக்கும் ஒரு நூலகம், இது மெய்நிகர் கணினிகளை மேலாண்மை செய்யும் சிறிய API ஆகும்.

  • மெய்நிகர் கணினி மேலாளர், இது மெய்நிகர் கணினிகளை கண்காணிக்கவும் மேலாண்மை செய்யவும் உள்ள ஒரு வரைகலை வசதியாகும்.

  • மெய்நிகர் கணினி நிறுவி மூலம் அமைக்கப்பட்டது, மேலும் மெய்நிகர் கணினிகளை கிக்ஸ்டார்ட் செய்யும் திறனும் உள்ளது.

Red Hat Network ம் மெய்நிகர் கணினிகளுக்கு துணைபுரிகிறது.

இப்போது மெய்நிகராக்க வசதி பின்வரும் வரம்புகளை கொண்டுள்ளது:

  • மெய்நிகராக்கம் செயல்படுத்தும் போது, ரேம் இடைநிறுத்தப்படுதல் அல்லது வட்டு இடைநிறுத்தப்படுதல் துணை புரியும் CPU அலைவரிசை அளவிடுதலை செய்ய முடியாது.

  • வன்பொருள் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்கள் 2 ஜிபிக்கு மேல் மெய்நிகர் நினைவகத்தை கொண்டிருக்க முடியாது.

  • முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்கள் சேமிக்கப்பட, மீட்டெடுக்க அல்லது இடம்பெயர செய்ய முடியாது.

  • xm create கட்டளை மெய்நிகர் கணினி மேலாளரில் வரைகலையை கொண்டிருக்கவில்லை.

  • மெய்நிகராக்கம் பிணைக்கப்பட்ட பிணைய கூறுகளில் மட்டுமே துணைபுரிகிறது. விருந்தினர்களால் பயன்படுத்தப்படும் அனைத்து தொடர்புடைய கருவிகளும் தானாக இதனை முன்னிருப்பாக தேர்வு செய்யும்.

  • மெய்நிகராக்கத்திற்கு முன்னிருப்பு Red Hat SELinux கொள்கை /etc/xenக்கு மட்டுமே கட்டமைப்பு கோப்புகளை எழுத அனுமதிக்கும், பதிவு கோப்புகள் /var/log/xen/க்கு எழுதப்படும், மற்றும் வட்டு கோப்புகள் (கோர் டம்ப் உட்பட) /var/lib/xen இல் எழுதப்படும். இந்த முன்னிருப்புகள் semanage கருவி மூலம் மாற்றப்படும்.

  • இந்த மெய்நிகராக்க வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள hypervisor க்கு NUMA-aware இல்லை; எனினும், NUMA கணினிகளில் இதன் செயல்திறன் மிதமானதாவே இருக்கும். இது Red Hat Enterprise Linux 5 இன் எதிர்கால மேம்படுத்தலில் அறிக்கையிடப்படுகிறது.

    இதில் பணி புரிய, NUMA கணினியின் BIOS இல் memory node interleaving ஐ செயல்படுத்த வேண்டும். இது அதிக செயல்திறனுக்கு உறுதியளிக்கும்.

  • பகுதி மெய்நிகராக்கப்பட்ட செயற்களங்கள் தற்போது en-US தவிர மற்ற விசைப்பலகைக்கு துணைபுரியாது. எனினும் மற்ற விசைப்பலகைகள் சில விசைகளை தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளது. இது Red Hat Enterprise Linux 5 இன் எதிர்கால மேம்படுத்தலில் அறிக்கையிடப்படுகிறது.

  • மெய்நிகராக்கப்பட்ட கர்னல் kdump செயல்பாட்டை பயன்படுத்த முடியாது.

  • qcow மற்றும் vmdk உருக்கள் துணைபுரியவில்லை. விருந்தினரை கைமுறையாக கட்டமைக்கும் போது உருக்களை சேமிக்கும் பருநிலை அல்லது தருக்க சாதனம் phy: வகையை பயன்படுத்த வேண்டும். கோப்பு சேமிக்கப்பட்ட உருக்கள், உரு வகையை tap:aio: ஆக பகுதி மெய்நிகராக்கத்திற்கும் மற்றும் file: ஐ மெய்நிகராக்கப்பட்ட விருந்தினருக்கும் அமைக்கிறது.

  • முழுவதும் மெய்நிகர் செயற்களங்களின் விவரக்குறிப்பு சரி இல்லாமல் இருக்கலாம். இந்த சிக்கல் அடுத்த சிறிய Red Hat Enterprise Linux 5 வெளியீட்டில் அறிக்கையிடப்படும்.

  • பகுதி மெய்நிகராக்கப்பட்ட செயற்களங்கள் தானாக-கண்டறியும் தொடர்புடைய சுட்டி நகர்த்தல் மற்றும் நிலைகாட்டி நகர்த்தலில் மட்டுமே கண்டறியப்படும். இது Red Hat Enterprise Linux 5 இன் எதிர்கால மேம்படுத்தலில் அறிக்கையிடப்படும்.

  • சில dom0 சீரியல் பணியக அமைவுகளுக்கு கூடுதல் கட்டமைப்பு தேவைப்படுகிறது. பழுது நீக்குதல் பிரிவை மெய்நிகராக்க கையேட்டில் பிரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு பார்க்கவும்.

  • பகுதி மெய்நிகராக்க விருந்தினர் கணினிக்கு வேலை செய்யவும் பணியகத்தை கொள்ள, நீங்கள் console=xvc0 ஐ கர்னல் கட்டளை வரியில் குறிப்பிட வேண்டும்.

  • சிதறியுள்ள கோப்புகளை பயன்படுத்தி விருந்தினர் இயக்கத்தளங்கள் கட்டமைக்கப்படும் போது, dom0 வட்டு இடத்தை விட்டு வெளியே செல்லலாம். இந்த நிகழ்வுகள் விருந்தினர் வட்டு எழுதுவதை முழுவதும் தடுக்கிறது, மற்றும் விருந்தினரில் தகவலும் இழக்கப்படும். மேலும், சிதறியுள்ள கோப்புகளை பயன்படுத்தும் விருந்தினர்கள் உள்ளீடு/வெளிப்பாட்டில் பாதுகாப்பாக ஒருங்கிணைக்கப்படாது.

    எனினும், சிதறாத கோப்புகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சிதறாத கோப்புகளில் விருந்தினர்களை கட்டமைக்க, virt-installஐ செய்யும் போது --nonsparse விருப்பத்தைப் பயன்படுத்தவும்.

இணைய சேவையக தொகுத்தல் மாற்றப்படுகிறது

Red Hat Enterprise Linux 5 இப்போது Apache HTTP சேவையகத்தின் பதிப்பு 2.2 ஐ சேர்க்கிறது. இந்த வெளியீடு 2.0 வரிசையின் பல மேம்படுத்தல்களை இதையும் சேர்த்து கொண்டுள்ளது:

  • மேம்படுத்தப்பட்ட இடையக தொகுதிகள் (mod_cache, mod_disk_cache, mod_mem_cache)

  • ஒரு புதிய வடிவம் நம்பகமான மற்றும் அங்கீகார துணைக்கு, நம்பகமான தொகுதிகளை முந்தைய பதிப்புகளில் கொடுத்ததை மாற்றுகிறது

  • பதிலாள் பளு சரிபடுத்தலில் துணைபுரிதல் (mod_proxy_balancer)

  • பெரிய கோப்புகளை (2GB க்கு அதிகமானது) 32-பிட் தளங்களில் கையாள துணைபுரிதல்

முன்னிருப்பு httpd கட்டமைப்புக்கு பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது:

  • mod_cern_meta மற்றும் mod_asis தொகுதிகள் முன்னிருப்பாக ஏற்றப்படவில்லை.

  • mod_ext_filter தொகுதி தற்போது முன்னிருப்பாக ஏற்றப்பட்டது.

நீங்கள் முந்தைய Red Hat Enterprise Linux வெளியீட்டிலிருந்து மேம்படுத்தினால், httpd கட்டமைப்பு httpd 2.2க்கு மேம்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, http://httpd.apache.org/docs/2.2/upgrading.html ஐ பார்க்கவும்.

httpd 2.0க்கான மூன்றாம் நபர் தொகுதிகள் மொழிபெயர்க்கும் போது அது httpd 2.2 ஆக மீண்டும் கட்டப்படும்.

php

PHP இன் பதிப்பு 5.1 இப்போது Red Hat Enterprise Linux 5 இல் சேர்க்கப்பட்டுள்ளது, இது மொழிகளில் குறிப்பிட்ட செயல்திறன்களை அதிகரித்துள்ளது. சில உரைகள் புதிய பதிப்புக்கு ஏற்றது போல திருத்தப்பட வேண்டும்; பின்வரும் இணைப்பில் PHP 4.3 லிருந்து PHP 5.1 க்கு மாற பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது:

http://www.php.net/manual/en/migration5.php

/usr/bin/php இயங்கக்கூடியது இப்போது CLI கட்டளை வரி CGI SAPI அல்லாமல், SAPI ஆல் உருவாக்கப்படுகிறது. /usr/bin/php-cgiஐ CGI SAPI க்கு பயன்படுத்துகிறது. php-cgi இயங்கக்கூடியதும் FastCGI துணைபுரிதலை கொண்டுள்ளது.

பின்வரும் விரிவாக்க தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது:

  • mysqli விரிவாக்கம், MySQL 4.1 க்காக சிறப்பாக ஒரு புதிய முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது(php-mysql தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

  • தேதி, hash, பிரதிபலிப்பு, SPL மற்றும் SimpleXML (php தொகுப்புடன் உட்பொதியப்பட்டது)

  • pdo மற்றும் pdo_psqlite (php-pdo தொகுப்பில்)

  • pdo_mysql (php-mysql தொகுப்பில்)

  • pdo_pgsql (php-pgsql தொகுப்பில்)

  • pdo_odbc (php-odbc தொகுப்பில்)

  • soap (php-soap தொகுப்பில்)

  • xmlreader மற்றும் xmlwriter (php-xml தொகுப்பில்)

  • dom (domxml விரிவாக்கத்தை php-xml தொகுப்பில் மாற்றுகிறது)

பின்வரும் விரிவாக்க தொகுதிகள் சேர்க்கப்படவில்லை:

  • dbx

  • dio

  • yp

  • overload

  • domxml

PEAR Framework

PEAR framework php-pear தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. PEAR கூறுகள் மட்டுமே Red Hat Enterprise Linux 5 இல் சேர்க்கப்பட்டுள்ளது:

  • Archive_Tar

  • Console_Getopt

  • XML_RPC

மறைகுறியாக்கப்பட்ட இடமாற்று பகிர்வுகள் மற்றும் ரூட்டில்லாத கோப்பு முறைமைகள்

Red Hat Enterprise Linux 5 இப்போது அடிப்படை துணையை மறைகுறியாக்கப்பட்ட இடமாற்று பகிர்வு மற்றும் ரூட்டில்லாத கோப்பு முறைமையில் வழங்குகிறது. இந்த வசதியை பயன்படுத்த, அதற்கான உள்ளீட்டை /etc/crypttab இல் சேர்த்து மற்றும் /etc/fstab இல் சாதனங்களை உருவாக்க குறிப்பிடுகிறது.

கீழே உள்ளது மாதிரி /etc/crypttab உள்ளீடு:

my_swap /dev/hdb1 /dev/urandom swap,cipher=aes-cbc-essiv:sha256

இது மறைகுறியாக்கப்பட்ட தடுப்பு சாதனம் /dev/mapper/my_swapஐ உருவாக்குகிறது, இது /etc/fstab இல் குறிப்பிடப்படுகிறது.

கீழே உள்ளது ஒரு கோப்பு முறைமை தொகுதிக்கு மாதிரி /etc/crypttab உள்ளீடு:

my_volume /dev/hda5 /etc/volume_key cipher=aes-cbc-essiv:sha256

/etc/volume_key கோப்பு வெற்று உரை மறைகுறியாக்க குறியீட்டை கொண்டுள்ளது. நீங்கள் none என முக்கியமான கோப்பு பெயர் குறிப்பிட்டால், துவக்குவதற்கு பதிலாக மறைகுறியாக்க குறியீட்டை கேட்கும் படி கட்டமைக்கப்படுகிறது.

LUKS (Linux Unified Key Setup)ஐ கோப்பு முறைமை தொகுதிகளில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதனை செய்ய பின்வரும் படிநிலைகளை செய்யவும்:

  1. cryptsetup luksFormatஐ பயன்படுத்தி மறைகுறியாக்கப்பட்ட தொகுதியை உருவாக்குகிறது.

  2. /etc/crypttabக்கு தேவையான உள்ளீட்டை சேர்க்கவும்.

  3. cryptsetup luksOpenஐ பயன்படுத்தி கைமுறையாக தொகுதியை அமைக்கவும் (அல்லது மறுதுவக்கவும்).

  4. மறைகுறியாக்கப்பட்ட தொகுதியில் ஒரு கோப்பு முறைமையை உருவாக்கவும்.

  5. /etc/fstabக்கு தேவையான உள்ளீட்டை சேர்க்கவும்.

mount மற்றும் umount

mount மற்றும் umount கட்டளைகள் NFSக்கு நேரடியாக துணை புரியாது; ஒரு உட்கட்டப்பட்ட NFS கிளையன் இல்லை. ஒரு தனி nfs-utils தொகுப்பு, /sbin/mount.nfs மற்றும் /sbin/umount.nfs ஐ கொடுக்கும் உதவியாளர்கள் இதற்கு நிறுவப்பட வேண்டும்.

CUPS அச்சடிப்பி உலாவுதல்

CUPS அச்சடிப்பி உள்ளமை துணை பிணையத்தில் உலாவுதல் வரைகலை கருவி system-config-printer மூலம் கட்டமைக்கப்பட வேண்டும். இது CUPS இணைய முகப்பை பயன்படுத்தி, http://localhost:631/ இல் செய்யப்படலாம்.

subnet களுக்கிடையே நேரடியான ஒலிபரப்பை அச்சடிப்பிகளில் தேட, கிளையனில் /etc/cups/cupsd.conf இல் திறந்து BrowseAllow @LOCALBrowseAllow ALL ஆல் மாற்றுகிறது.

ATI மற்றும் R500 துணை

R500 சிப்செட் அடிப்படையான ATI வரைகலை அட்டைகள் vesa இயக்கிக்கு மட்டும் துணைபுரிகிறது, Red Hat Enterprise Linux 5 இல் வெளி திரையகங்கள், LCD ப்ரொஜக்டர் அல்லது முடுக்கப்பட்ட முப்பரிமாணத்திற்கு துணைபுரியவில்லை.

up2date மற்றும் yum

up2date என்பது yum (Yellowdog Updater Modified) ஆல் எதிரிடையானது. நீங்கள் up2date-சார்ந்த உரைகளை உங்கள் கணினியில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. yum பற்றிய மேலும் விவரங்களுக்கு, man yum கட்டளையால் அதன் கையேடு பக்கத்தை பார்க்கவும்; நீங்கள் /usr/share/doc/yum-<version> மற்றும் /usr/share/doc/yum-metadata-parser-<version> கீழ் உள்ள அடைவுகளில் நிறுவப்பட்ட ஆவணங்களை பார்க்கவும் (<version> இன் பதிப்புகளை அதற்கான நிறுவப்பட்ட yum மற்றும் yum-metadata-parser இல் மாற்றவும்).

OpenLDAP சேவையகம் மற்றும் Red Hat அடைவு சேவையகம்

Red Hat அடைவு சேவையகம் என்பது LDAP-அடிப்படையான சேவையகம், இது தொழில் மற்றும் பிணைய தரவை இயக்கத்தள தனிப்பட்டது, பிணைய அடிப்படையான பதிவகமாக மையப்படுத்துகிறது, இது OpenLDAP சேவையக கூறுகளில் மாற்றி அமைக்கிறது, இது Red Hat Enterprise Linux 5 க்கு பின் எதிரிடையாகிறது. Red Hat அடைவு சேவையகம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, http://www.redhat.com/software/rha/directory/ ஐ பார்க்கவும்.

i810 இயக்கி மற்றும் i830 துணை

i810 இயக்கி அனைத்து ஒருங்கிணைக்கப்பட்ட Intel வரைகலை சிப்செட்களுக்கும் i810 லிருந்து i965 க்கு துணைபுரிகிறது. எனினும், i830 (மற்றும் புதியவை) சிப்செட்களுக்கான துணைபுரிதல் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; i810 இயக்கி ஒளிப்படBIOS இல் உள்ள முறைகள் பட்டியலை அமைக்கிறது. உங்கள் கணினி i830 அல்லது புதிய சிப்செட் நிறுவப்பட்டிருந்தால், பின்வரும் கட்டளையை இயக்கி இருக்கும் முறைகளை வரையறுக்கவும்:

grep Mode: /var/log/Xorg.0.log

நட்சத்திர குறியீட்டால் (*) குறிக்கப்பட்ட முறைகள் தேர்ந்தெடுத்தலுக்கு உள்ளது.

பல மடிக்கணினி ஒளிப்பட BIOSகள் ஒரு முறையை ஒப்பிட பலக அளவிற்கு வழங்காது. எனவே தேர்வு செய்யும் முறை சிராத்து, அழிக்கப்பட்டு அல்லது கறுப்பு எல்லாக தோன்றும். எனினும், உங்கள் தேர்வு செய்த முறை சரியாக காட்சி தரவில்லை எனில் உங்கள் வன்பொருள் விற்பனையாளரிடமிருந்துBIOSஐ மேம்படுத்தி சரியாக வேலை செய்ய வைக்கலாம்.

ஸ்மார்ட் கார்ட் புகுபதிவு

Red Hat Enterprise Linux 5 Smart Cardsகளுக்கு துணைபுரிகிறது, இது உங்கள் குறியீடு சோடிக்கு பாதுகாப்பான சேமிப்பகத்தையும் ஒரு ஒருங்கிணைந்த பொது குறியீட்டு சான்றிதழையும் கொடுக்கிறது. இந்த குறியீடுகள் ஒரு PIN ஐ குறியீடு அல்லது சான்றிதழ் ஸ்மார்ட் அட்டையில் தேவைப்படும் போது உள்ளிட்டு பாதுகாக்கப்படுகிறது.

வரிசைப்படுத்தும் ஸ்மார்ட் கார்ட்கள் Red Hat Enterprise Linux 5 சூழலில் உங்களுக்கு Kerberos மற்றும் S/MIME வசதிகளில் அங்கீகார உறவில் பாதுகாப்பை அதிகரிக்கிறது. Red Hat Enterprise Linux 5 பின்வருவனவற்றில் துணைபுரிகிறது:

  • Axalto Cyberflex 32K e-Gate

  • DoD CAC Cards

ஸ்மார்ட் கார்ட் அங்கீகாரத்தை அமைக்க, உங்கள் பிணையம் Red Hat அடைவு சேவையகம் மற்றும் Red Hat சான்றிதழ் அமைப்பால் திறனாக்கப்பட வேண்டும். ஸ்மார்ட் கார்ட் பற்றிய மேலும் தகவலுக்கு Red Hat Enterprise Linux வரிசைப்படுத்தல் கையேட்டில் Single Sign-On அத்தியாயத்தைப் பார்க்கவும்.

Intel PRO/Wireless 3945ABG பிணைய இணைப்பு துணை

Red Hat Enterprise Linux 5 இன் இந்த வெளியீடு ipw3945 (Intel PRO/Wireless 3945ABG Network Connection) தகவிக்கு துணைபுரிகிறது. Red Hat Enterprise Linux 5 துணை வட்டு இயக்கி, ஒழுங்குப்படுத்தும் டீமான் மற்றும் firmware போன்ற தகவிக்கு துணைபுரிவதை கொண்டுள்ளது.

ipw3945 வடமில்லா தகவிக்கு துணைபுரிதலை செயல்படுத்த, Red Hat Enterprise Linux 5 துணை வட்டுகளில் "3945" கோப்பு பெயர்களை தேடி அவற்றை நிறுவவும்.

rawio

rawio ஒரு எதிரிடையான முகப்பாகும்; எனினும், Red Hat Enterprise Linux 5 அதற்கு துணைபுரிகிறது. நீங்கள் rawio ஐ பயன்படுத்தி சாதன அணுகலை கொண்டிருக்கும் பயன்பாட்டை கொண்டிருந்தால், O_DIRECT குறியால் உங்கள் பயன்பாட்டில் தடுக்கப்பட்ட சாதனத்தை திறக்க பரிந்துரைக்கப்படுகிறது. rawio முகப்பு Red Hat Enterprise Linux 5 இன் கடைசி வரை இருக்கும், ஆனால் இது எதிர்கால வெளியீட்டில் நீக்கப்படலாம்.

தற்போது, AIO (Asynchronous I/O) கோப்பு முறைமை O_DIRECT அல்லது இடையகம் இல்லாத முறையில் மட்டுமே துணைபுரிகிறது. மேலும், ஒருங்கிணைப்பில்லாத வாக்கெடுப்பு முகப்பு எதுவும் இல்லை, இந்த AIO துணைபுரிவதில்லை.

ctmpc

ctmpc ஒரு எதிரிடையான இயக்கியாகும்; எனினும், Red Hat Enterprise Linux 5 இன் ஆயுள் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளது. இது எதிர்கால வெளியீடுகளில் நீக்குவதற்கான காரணியாகும்.

கொள்கை தொகுதிகள் மற்றும் semanageக்கு துணைபுரிதல்

Red Hat Enterprise Linux 5 இப்போது கொள்கை தொகுதிகள் மற்றும் semanageக்களுக்கு துணைபுரிகிறது. கொள்கை தொகுதிகள் கொள்கை தனிபயனாக்கல்கள் மற்றும் மூன்றாம் நபர் கொள்கைகளை எளிதாக உருவாக்கி பகிர semodule மற்றும் checkmodule கருவிகள் மூலம் செய்கிறது.

semanage கருவி என்பது ஒரு கொள்கை மேலாண்மை கருவியாகும். அது SELinux கட்டமைப்பை மாற்றுகிறது. இது உங்கள் கோப்பு சூழல்கள், பிணைய கூறு பெயரிடல் மற்றும் லினக்ஸிலிருந்து SELinuxக்கு பயனர் ஒப்பீடு ஆகியவற்றை அனுமதிக்கிறது.

வெற்று சாதன ஒப்பிடுதல்

raw சாதனங்களின் முகப்பு Red Hat Enterprise Linux 5 இல் எதிரிடையாக உள்ளது; raw சாதன ஒப்பீடு இப்போது udev விதிகள் மூலம் கட்டமைக்கப்படுகிறது.

raw சாதன ஒப்பீட்டை கட்டமைக்க, அதற்கான உள்ளீட்டை /etc/udev/rules.d/60-raw.rules இல் பின்வரும் வடிவங்களில் கொடுக்கவும்:

  • சாதன பெயர்களுக்கு:

    ACTION=="add", KERNEL="<device name>", RUN+="raw /dev/raw/rawX %N"
    
  • பெரும்பான்மையான / சிறுபான்மையான எண்களுக்கு:

    ACTION=="add", ENV{MAJOR}="A", ENV{MINOR}="B", RUN+="raw /dev/raw/rawX %M %m"
    

<device name> இல் நீங்கள் பிணைக்க விரும்பும் சாதன பெயரில் மாற்றவும் (எடுத்துக்காட்டாக, /dev/sda1). "A" மற்றும் "B" ஆகியவை நீங்கள் பிணைக்க வேண்டிய சாதனத்தின் பெரும் மற்றும் சிறுபான்மை எண்களாகும் மற்றும் X ஒரு வெறும் சாதன எண், இதனை நீங்கள் கணினியில் பயன்படுத்துவீர்கள்.

நீங்கள் பெரிய முன் இருக்கும் /etc/sysconfig/rawdevices கோப்பினை கொண்டிருந்தால், பின்வரும் உரையால் அதை மாற்றவும்:

#!/bin/sh

grep -v "^ *#" /etc/sysconfig/rawdevices | grep -v "^$" | while read dev major minor ; do
        if [ -z "$minor" ]; then
                echo "ACTION==\"add\", KERNEL==\"${major##/dev/}\", RUN+=\"/usr/bin/raw $dev %N\""
        else
                echo "ACTION==\"add\", ENV{MAJOR}==\"$major\", ENV{MINOR}==\"$minor\", RUN+=\"/usr/bin/raw $dev %M %m\""
        fi
done
QLogic துணைபுரிதல்

Red Hat Enterprise Linux 5 iSCSI HBA (Host Bus Adapters) இன் QLogic குடும்பத்திற்கு துணைபுரிகிறது. தற்போது, இந்த போர்டின் iSCSI முகப்பு மட்டும் துணைபுரிகிறது (qla4xxx இயக்கியை பயன்படுத்தி).

கூடுதலாக, தற்போது Red Hat இந்த ஈத்தர்நெட் NIC க்கு துணைபுரிவதில்லை, இதன் செயல்திறனுக்கு qla3xxx இயக்கி தேவைப்படுகிறது. இந்த பிரச்சினை Red Hat Enterprise Linux 5 இன் சிறிய வெளியீட்டில் அறிக்கையிடப்படும்.

IBM System z விளக்கம் அமைத்தல்

IBM System z ஐ பாதிப்புக்குள்ளாக்க தகவல் 31-பிட் பயன்பாட்டுக்கு அமைக்கப்படுகிறது, நீங்கள் gcc விருப்பத்தை -march=z900 இல் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 64-பிட்பயன்பாடுகளுக்கு, gcc ஆனது முன்னிருப்பாக IBM System z தகவல் அமைவை பாதிப்படைய செய்யவும்.

லினகஸுக்கு iSeries அணுகல்

லினக்ஸுக்கான iSeries ODBC இயக்கி லினக்ஸுக்கானiSeries Access ஆல் மாற்றப்பட்டது, இதனை பின்வரும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்:

http://www.ibm.com/eserver/iseries/access/linux/

iSeries லினக்ஸிற்கு லினக்ஸ் அடிப்படையான iSeries சேவையகங்களில் அணுகுகிறது, மற்றும் உங்களை :

  • DB2 UDBஐ (பொதுவான தரவுத்தளம்) iSeries க்கு ODBC இயக்கியை பயன்படுத்தி அணுக அனுமதிக்கிறது

  • ஒரு 5250 அமர்வு ஒரு iSeries சேவையகத்திற்கு லினக்ஸ் கிளையனில் ஆரம்பிக்கப்படுகிறது

  • DB2 UDBஐ EDRS வழியாக அணுகவும் (Extended Dynamic Remote SQL) இயக்கி

  • 32-bit (i386 மற்றும் PowerPC) மற்றும் 64-bit (x86-64 மற்றும் PowerPC) தளங்களுக்கு துணை புரிகிறது

IBM Power4 iSeries

Red Hat Enterprise Linux IBM Power4 iSeries க்கு துணை புரியாது.

இயக்கி மேம்படுத்தல் நிரல்

இந்தப் பிரிவு Red Hat Enterprise Linux 5 இன் கீழ் இயக்கி மேம்படுத்தல் நிரல் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.

கர்னல் தொகுதி தொகுப்புகள்

Red Hat Enterprise Linux 5 இல், தற்போதைய கர்னல் ABI பதிப்பினை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட கர்னல் தொகுதி தொகுப்புகளை ஒரு குறிப்பிட கர்னல் வெளியீட்டு எண் இல்லாமல் உருவாக்க முடியும். இந்த வசதி Red Hat Enterprise Linux 5 கர்னலின் வரையறைக்கு எதிராக ஒற்றை வெளியீட்டில் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் இணைய தளம் http://www.kerneldrivers.org/ தொகுக்கும் பணி பற்றிய பல தகவலையும், பல மாதிரிகளையும் கொண்டுள்ளது.

பின்வரும் சிக்கல்களும் கண்டறியப்பட்டன:

  • துவக்க பாதை இயக்கிகள் kmod தொகுப்புகளாக பங்கிடப்பட்டதற்கு அதிகாரப்பூர்வமான சேவையளிக்கப்படுவதில்லை.

  • மேலாணை செய்யவும் in-kernel இயக்கிகள் தற்போது துணை புரியவில்லை.

இந்த சிக்கல்கள் Red Hat Enterprise Linux 5 இன் எதிர்கால மேம்படுத்திலில் அறிக்கையிடப்படும்.

கர்னல் தொகுதி ஏற்றுதல்

தொகுதி ஏற்றும் பண்பு Red Hat Enterprise Linux இன் முந்தைய பதிப்பிலிருந்து Red Hat Enterprise Linux 5 இல் மாற்றப்பட்டுள்ளது. தொகுதிகள் Red Hat Enterprise Linux 4 இல் உள்ளது போல Red Hat Enterprise Linux 5 கர்னல் தொகுப்புகள் கையொப்பமிடப்பட்டது. Red Hat Enterprise Linux 5 கர்னல்களில், எப்படியும் வேறு கர்னலிருந்து ஒரு கையொப்பமிடப்பட்ட தொகுதியை ஏற்றுவது சாத்தியமில்லை.

அதாவது ஒரு தொகுதி ஆரம்ப Red Hat Enterprise Linux 5 பங்கீட்டிலிருந்து மாற்றுவது எதிர்வரும் கர்னல்களில் ஏற்ற முடியாது. இது பயனர்களை துணை புரியாத தொகுதிகளை தடுக்க உதவுகிறது.Red Hat மட்டுமே கையொப்பமிடப்பட்ட மற்றும் பங்கீட்டில் சேர்க்கப்பட்ட தொகுதிகளுக்கு துணை புரிகிறது.

ஒரு பழைய தொகுதியை ஏற்ற வேண்டுமென்றால், அதனை கையொப்பமில்லாமல் மீண்டும் உருவாக்க வேண்டும். மாற்றாக, பின்வரும் கட்டளையை பயன்படுத்தி இரும கோப்பிலிருந்து கையொப்பத்தை நீக்கலாம்:

objcopy -R .module_sig <module name>-mod.ko <module name>-nosig.ko

நீங்கள் கையொப்பமிடாத தொகுதிகளை ஏற்றும் முன் Red Hat முழு சேவை அளிக்கும் பிரதிநிதியை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

சர்வதேசமயமாக்கல்

இந்தப் பிரிவு Red Hat Enterprise Linux 5 இன் கீழ் மொழிகள் துணை பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.

உள்ளீடு முறைகள்

SCIM (Smart Common Input Method) என்பது IIIMF உள்ளீடு முறையை ஆசிய மற்றும் பிற மொழிகளுக்கு இந்த வெளியீட்டில் மாற்றப்பட்டுள்ளமு. முன்னிருப்பு GTK உள்ளீடு முறைமை தொகுதி SCIMக்கு scim-bridgeஆல் வழங்கப்பட்டது; Qt இல், இது scim-qtimm ஆல் வழங்கப்படுகிறது.

கீழே உள்ளது வேறுபட்ட மொழிகளுக்கான முன்னிருப்பு குறுக்கு விசைகளாகும்:

  • அனைத்து மொழிகள்: Ctrl-Space

  • ஜப்பானியம்: Zenkaku-Hankaku அல்லது Alt-`

  • கொரியன்: Shift-Space

SCIM நிறுவப்பட்டிருந்தால், அது முன்னிருப்பாக அனைத்து பயனர்களுக்கும் இயங்கும்.

SCIM தொகுப்புகள் நிறுவிய பின் அல்லது நீக்கிய பின், ஒரு புதிய பணிமேடை அமர்வை SCIM மொழி பட்டியில் மாற்றத்தை காண துவக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மொழி நிறுவல்

கூடுதல் மொழி துணைபுரிதலை சில ஆசிய மொழிகளுக்கு செயல்படுத்த, அதற்கான மொழி துணைபுரியும் தொகுப்புகளை நிறுவ வேண்டும். கீழே இந்த மொழிகளின் பட்டியல் மற்றும் அதற்கான மொழி துணைபுரியும் தொகுப்பை நிறுவ இயக்க வேண்டிய கட்டளைகள் (ரூட்டாக) உள்ளன:

  • அசாமி — yum install fonts-bengali m17n-db-assamese scim-m17n

  • பெங்காலி — yum install fonts-bengali m17n-db-bengali scim-m17n

  • சீனம் — yum install fonts-chinese scim-chewing scim-pinyin scim-tables-chinese

  • குஜராத்தி — yum install fonts-gujarati m17n-db-gujarati scim-m17n

  • இந்தி — yum install fonts-hindi m17n-db-hindi scim-m17n

  • ஜப்பானியம் — yum install fonts-japanese scim-anthy

  • கன்னடம் — yum install fonts-kannada m17n-db-kannada scim-m17n

  • கொரியன் — yum install fonts-korean scim-hangul

  • மலையாளம் — yum install fonts-malayalam m17n-db-malayalam scim-m17n

  • மராத்தி — yum install fonts-hindi m17n-db-marathi scim-m17n

  • ஒரியா — yum install fonts-oriya m17n-db-oriya scim-m17n

  • பஞ்சாபி — yum install fonts-punjabi m17n-db-punjabi scim-m17n

  • சிங்களம் — yum install fonts-sinhala m17n-db-sinhala scim-m17n

  • தமிழ் — yum install fonts-tamil m17n-db-tamil scim-m17n

  • தெலுங்கு — yum install fonts-telugu m17n-db-telugu scim-m17n

நீங்கள் scim-bridge-gtk மற்றும் scim-qtimm ஐ கூடுதல் மொழி துணைபுரிதலில் நிறுவ பரிந்துரைக்கப்படுகிறது. scim-bridge-gtk தொகுப்பு இரும முரண்பாடுகளை மூன்றாம் நபர் பயன்பாடுகளை தடுக்கlibstdc++ இன் பழைய பதிப்புகள் இணைக்கப்பட்டது.

கூடுதல் மொழி துணைபுரிதல் தொகுப்பு OpenOffice க்கு உள்ளது (openoffice.org-langpack-<language code>_<locale>) and KDE (kde-i18n-<language>). இந்த தொகுப்புகள் yum மூலம் நிறுவப்படுகிறது.

im-chooser

ஒரு புதிய கட்டமைப்பு கருவி im-chooser சேர்க்கப்பட்டுள்ளது, இது உங்கள் பணிமேடையில் எளிதாக உள்ளீடு முறையை செயல்படுத்த, செயல்நீக்க உங்களை அனுமதிக்கிறது. எனவே SCIM நிறுவப்பட்ட உங்கள் பணிமேடையில் அதனை செயல்படுத்த வேண்டாம் என்றால், அதனை im-chooser ஐ பயன்படுத்தி செயல்நீக்கலாம்.

xinputrc

X startup இல், xinput.sh ஆனது ~/.xinput.d/ அல்லது /etc/xinit/xinput.d/ இன் கீழ் தேடப்படும் கட்டமைப்பு கோப்புகளுக்கு பதிலாக இப்போது ~/.xinputrc அல்லது /etc/X11/xinit/xinputrcஐ மூலப்படுத்துகிறது.

Firefox இல் Pango துணை

Firefox Red Hat Enterprise Linux 5இல் Pango வால் கட்டப்பட்டுள்ளது, இது சில உரைகளான, இண்டிக் மற்றும் சில CJK உரைகளுக்கு நன்றாக துணைபுரிகிறது.

Pango ஐ செயல்நீக்க, Firefox ஐ துவக்குவதற்கு முன் MOZ_DISABLE_PANGO=1 என உங்கள் சூழலில் அமைக்கவும்.

எழுத்துருக்கள்

எழுத்துருவில் தடிமன் வடிவம் இல்லாமல் இருந்தது இப்போது துணைபுரிகிறது.

சீனத்தின் புதிய எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன: AR PL ShanHeiSun Uni (uming.ttf) மற்றும் AR PL ZenKai Uni (ukai.ttf). முன்னிருப்பு எழுத்துரு AR PL ShanHeiSun Uni ஆகும், இது உட்பொதியப்பட்ட பிட்மேப்களை கொண்டுள்ளது. இதில் வெளிகோடு வரைவுகள் உள்ளன, ~/.font.conf கோப்பில் பின்வரும் பிரிவை சேர்க்கவும்:

<fontconfig>
  <match target="font">
    <test name="family" compare="eq">
      <string>AR PL ShanHeiSun Uni</string>
    </test>
    <edit name="embeddedbitmap" mode="assign">
      <bool>false</bool>
    </edit>
  </match>
</fontconfig>                                 
                        
gtk2 IM துணைப்பட்டி

Gtk2 சூழல் பட்டி IM துணைபட்டி முன்னிருப்பாக இருக்காது. இதனை செயல்படுத்த பின்வரும் கட்டளையை கட்டளை வரியில் உள்ளிடவும்:

gconftool-2 --type bool --set '/desktop/gnome/interface/show_input_method_menu' true

CJKஇல் உரை முறை நிறுவல் துணைபுரிதல்

CJK (சீனம், ஜப்பானியம் மற்றும் கொரியன்) எழுத்துரு துணை அனகோண்டா உரை முறை நிறுவலில் நீக்கப்பட்டது. உரை முறை நிறுவல் நீண்ட கால நிலையில் எதிரிடையாக வரைகலை முறை நிறுவலாக உள்ளது. VNC மற்றும் கிக்ஸ்டார்ட் முறைகள் விரும்பப்படுகிறது.

gtk+ deprecation

பின்வரும் தொகுப்புகள் எதிரிடையாக உள்ளது இவற்றை Red Hat Enterprise Linux இல் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது:

  • gtk+

  • gdk-pixbuf

  • glib

இந்த தொகுப்புகள் gtk2 ஸ்டேக்கில் எதிரிடையாக உள்ளது, இது சர்வதேசமயமாக்கல் மற்றும் எழுத்துரு கையாளுதலில் குறிப்பாக நல்ல செயல்பாட்டை கொடுக்கிறது.

பணியகத்தில் CJK உள்ளீடு

உங்கள் பணியகத்தில் சீனம், ஜப்பானியம் அல்லது கொரியனை காட்ட வேண்டுமென்றால், நீங்கள் framebuffer ஐ அமைக்க வேண்டும்; பின்னர் bogl-btermஐ நிறுவி, மற்றும் bterm ஐ framebufferஇல் இயக்கவும்.

கர்னல் குறிப்புகள்

இந்த பிரிவு 2.6.9 (Red Hat Enterprise Linux 4 அடிப்படையில்) மற்றும் 2.6.18 (Red Hat Enterprise Linux 5 இல்) உள்ள வேறுபாடுகளை ஜூலை 12, 2006 அன்று குறிப்பிடுகிறது. கூடுதல் வசதிகள் நாங்கள் தற்போது பணிபுரிவது (எடுத்துக்காட்டாக, மெய்நிகராக்கம்) 2.6.18 அல்லது 2.6.19 இல் தோன்றுவது இப்போது முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில், இந்த பட்டியல் Linus கிளையில் சேர்க்கப்பட்டுள்ள தொகுப்புகளை மட்டுமே காட்டுகிறது; தற்போது பணிபுரிவது சேர்க்கப்படவில்லை. அதே போல, இந்த பட்டியல் இறுதியானது அல்ல அல்லது புதிய Red Hat Enterprise Linux 5 வசதியின் முழு பட்டியலும் இல்லை, இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்ட நல்ல கண்ணோட்டத்தை கொடுக்காவிட்டாலும். மேலும், இந்தப் பிரிவு மேனிலையில் செய்யப்படும் மாற்றங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. இது குறிப்பிட்ட பல கீழ்நிலை வன்பொருள் துணையை மற்றும் சாதன இயக்கி தகவல் போன்றவற்றை சேர்க்கவில்லை.

பின்வருவது அடுத்த நிலையின் விவரமான பார்வையின் நல்ல மூலமாகும்:

http://kernelnewbies.org/LinuxChanges

செயல்திறன் / அளவிடுதல்
  • பெரிய கர்னல் பூட்டு கையகப்படுத்தல் (2.6.10)

  • தானாக கையகப்படுத்தும் பின்னிணைப்புகள் (2.6.13) (Red Hat Enterprise Linux 4 இல் துணைகணம்)

  • Lightweight பயனர் இட முன்னுரிமை (PI) துணை futexes க்கு, real-time பயன்பாடுகளுக்கு பயனுள்ளது (2.6.18)

  • புதிய 'mutex' பூட்டும் ப்ரிமிட்டிவ் (2.6.16)

  • உயர் திரைத்திறன் நேரம் (2.6.16)

    • குறைந்த-திரைதிறன் நேரம் முடிதல் API ஐ kernel/timer.c இல் செயல்படுத்தப்பட்டது, hrtimers கணினி கட்டமைப்பு மற்றும் செயல்திறனை அடிப்படையாக கொண்டு நல்ல திரைதிறனை மற்றும் சரிநுட்பத்தை வழங்குகிறது. இந்த நேரங்கள் தற்போது itimers, POSIX timers, nanosleep மற்றும் precise in-kernel timing இல் பயன்படுத்தப்படுகிறது.

  • Modular, on-the-fly switchable I/O schedulers (2.6.10)

    • இது Red Hat Enterprise Linux 4 இன் துவக்க விருப்பத்தில் மட்டும் சரிப்படுத்தக்கூடியது (மேலும் கணினி முழுவதற்கும் பதிலாக per-queue என இருக்கும்).

  • புதிய Pipe செயல்படுத்தல் (2.6.11)

    • 30-90% செயல்திறன் pipe அலைவரிசையில் மேம்படுத்தப்பட்டுள்ளது

    • சுற்று இடையகம் எழுத்தர்களை தடுப்பதை விட இன்னும் இடையகத்தை கொடுக்கிறது

  • "Big Kernel Semaphore": பெரிய கர்னல் பூட்டை semaphore ஆக மாற்றுகிறது

    • மறைந்தவற்றை குறைக்க நீண்ட பூட்டும் நேரங்களை கொண்டிருக்கிறது மற்றும் தன்னார்வ தலைமையை சேர்க்கிறது

  • X86 "SMP alternatives"

    • ஒரு ஒற்றை கர்னல் உருவை இயங்கு நேரத்தில் இருக்கும் தளத்திற்கு ஏற்ப ஒருங்கிணைக்கிறது

    • ref: http://lwn.net/Articles/164121/

  • libhugetlbfs

    • லினக்ஸில் பயன்பாடுகளை huge பக்க துணைபுரிதலை மூல குறியீடுகளை மாற்றாமல் அனுமதிக்கிறது

  • kernel-headers தொகுப்புகள்

    • glibc-kernheaders தொகுப்பை மாற்றுகிறது

    • புதிய headers_install வசதியை 2.6.18 கர்னலுக்கு பொருத்தமானதை வழங்குகிறது

    • குறிப்பிடப்பட வேண்டிய கர்னல் தலைப்பு தொடர்புடையது மாற்றப்படுகிறது:

      • <linux/compiler.h> தலைப்பு கோப்பு நீக்கப்பட்டது, இது பயன்படவில்லை

      • நீக்கப்பட்ட _syscallX() மேக்ரோக்கள்; பயனர் இடம் syscall()ஐ C நூலகத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்

      • நீக்கப்பட்ட <asm/atomic.h> மற்றும் <asm/bitops.h> தலைப்பு கோப்புகள்; C மொழிபெயர்ப்பி அதன் சொந்த அணு உள்ளமைக்கப்பட்ட செயல்பாடுகளை பயனர் இட நிரல்களுக்கு வழங்குகிறது

      • உள்ளடக்கம் முன்பு #ifdef __KERNEL__ ஆல் பாதுகாக்கப்பட்டது unifdef கருவியால் முழுவதும் நீக்கப்பட்டது; பகுதிகளை பார்க்கும் பொருட்டு __KERNEL__ குறிப்பிடப்படுவது பயனர் இடத்திற்கு தெரிவதில்லை

      • PAGE_SIZE மேக்ரோவை சில வடிவமைப்பிலிருந்து நீக்குகிறது, பக்க அளவுகளிலுள்ள மாற்றங்களால்; பயனர் இடம் sysconf (_SC_PAGE_SIZE) அல்லது getpagesize() ஐ பயன்படுத்துகிறது

    • பயனர் இடத்திற்கு நல்ல பொருத்தத்தை கொடுக்க, நீக்கப்பட்ட பல தலைப்பு கோப்புகள் மற்றும் தலைப்பு உள்ளடக்கம்

பொதுவாக சேர்க்கப்பட்ட வசதிகள்

  • kexec மற்றும் kdump (2.6.13)

    • diskdump மற்றும் netdump ஆகியவை kexec மற்றும் kdump ஆல் மாற்றப்படுகிறது, இது விரைவான துவக்க மற்றும் உகந்த kernel vmcoreகளை சோதனை முறைக்கு உருவாக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கும் கட்டமைப்பு விவரங்களுக்கும் /usr/share/doc/kexec-tools-<version>/kexec-kdump-howto.txt ஐ பார்க்கவும் (<version>ஐ நிறுவப்பட்ட kexec-tools தொடர்புடைய தொகுப்பின் பதிப்புடன் மாற்றுகிறது ).

    • இப்போது மெய்நிகராக்கப்பட்ட கர்னல்கள் kdump செயல்பாட்டை பயன்படுத்த முடியாது என்பதை குறித்து கொள்ளவும்.

  • inotify (2.6.13)

    • பின்வரும் syscallகளில் பயனர் முகப்பு உள்ளது: sys_inotify_init, sys_inotify_add_watch, மற்றும் sys_inotify_rm_watch.

  • பணி நிகழ்வு இணைப்பி (2.6.15)

    • fork, exec, id மாற்றம், மற்றும் அனைத்து பணிகளின் பயனர் இடத்தில் நிகழ்வுகளில் வெளியேறுதல் போன்றவற்றை அறிக்கையிடுகிறது.

    • பயன்பாடுகள் இந்த நிகழ்வுகளுக்கு பயனுள்ளதாக accounting / auditing (எடுத்துக்காட்டாக, ELSA), system activity monitoring (எடுத்துக்காட்டாக, top), பாதுகாப்பு, மற்றும் மூல மேலாண்மை (எடுத்துக்காட்டாக, CKRM). Semantics போன்றவற்றை சேர்த்து தடைகளை உருவாக்குகிறது பயனர் பெயர் இடத்திற்கும், "files as directories" மற்றும் கோப்பு முறைகளை பதிப்பிடுகிறது.

  • பொதுவான RTC (மெய் கடிகாரம்) துணை அமைப்பு (2.6.17)

  • splice (2.6.17)

    • புதிய IO செயல்பாடு பயன்பாடுகளுக்கிடையே தரவுகளை பரிமாற்றும் போது தரவை நகலெடுப்பதை தவிர்க்கிறது

    • ref: http://lwn.net/Articles/178199/

கோப்பு முறைமை / LVM

  • EXT3

    • ext3இல் விரிவாக்கப்பட்ட மதிப்புருக்கள் பெரிய inode க்கு துணை புரிகிறது: இடத்தை சேமித்து, சில நிகழ்வின் செயல்திறனை கூட்டுகிறது (2.6.11)

  • Device mapper பல பாதை துணைபுரிதல்

  • NFSv3 மற்றும் NFSv4 ACL துணைபுரிதல் (2.6.13)

  • NFS: wireஇல் பெரிய வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கு துணைபுரிகிறது (2.6.16)

    • லினக்ஸ் NFS கிளையன் இப்போது பரிமாற்று அளவு 1MB வரை துணைபுரிகிறது.

  • VFS மாற்றங்கள்

  • பெரிய CIFS மேம்படுத்தல் (2.6.15)

    • வசதிகளின் பல செயல்திறன் வளர்ச்சியடைய செய்கிறது மற்றும் Kerberos மற்றும் CIFS ACL க்கு துணை புரிகிறது

  • autofs4: பயனர் இட autofs க்கு நேரடி ஏற்ற துணைபுரிதல் கொடுப்பது மேம்படுத்தப்பட்டது (2.6.18)

  • cachefs core enablers (2.6.18)

பாதுகாப்பு

  • SELinuxக்கு பல நிலை பாதுகாப்பை செயல்படுத்தல் (2.6.12)

  • Audit subsystem

    • பணி சூழல் அடிப்படையான வடிப்பிக்கு துணைபுரிகிறது (2.6.17)

    • அதிகமான வடிப்பி விதி ஒப்பீடுகள் (2.6.17)

  • TCP/UDP getpeercon: பாதுகாப்பு எச்சரிக்கும் பயன்பாடுகளை முழு பாதுகாப்பு சூழலில் IPSec பாதுகாப்பு ஒருங்கிணைப்பில் இருந்து எடுக்க வெளியே இருந்து சாக்கெட் பயன்படுத்தப்படுகிறது. MLS-level தகவல் மட்டும் தேவைப்பட்டால் அல்லது யுனிக்ஸ் கணினிக்கு தேவைப்பட்டால், NetLabel ஆனது IPSecக்குப் பயன்படுத்தலாம்.

பிணையம்

  • பல TCP நெரிசல் தொகுதிகள் சேர்க்கப்பட்டன (2.6.13)

  • IPv6: பல புதிய sockopt / ancillary தரவை கூடுதல் API க்கு துணைபுரிகிறது (2.6.14)

  • IPv4/IPv6: UFO (UDP Fragmentation Offload) பரந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை (2.6.15)

    • UFO ஒரு வசதி இது லினக்ஸ் கர்னல் பிணைய ஸ்டேக்கில் IP ஒழுங்குப்படுத்தும் செயல்பாட்டை பெரிய UDP datagramஇலிருந்து வன்பொருளுக்கு வழங்குகிறது. இது பெரிய UDP datagramஇலிருந்து MTU-அளவுள்ளf பாக்கெட்டுகளுக்கு ஒழுங்குப்படுத்த குறைக்கிறது.

  • nf_conntrack subsystem சேர்க்கப்பட்டது (2.6.15)

    • netfilter இல் இருக்கும் இணைப்பு தேடும் துணை அமைப்பு ipv4ஐ மட்டுமே கையாளுகிறது. இதில் ipv6க்கு இரண்டு வழிகளில் இணைப்பு தேடும் துணைபுரிதல் உள்ளது; அனைத்து ipv4 இணைப்பு தேடும் குறியீட்டை ipv6 எண்ணிக்கை பகுதியாக இரட்டிப்பாகிறது, அல்லது(இந்த இணைப்புகளில் எடுக்கப்பட்ட தேர்ந்தெடுத்தல்கள்) பொதுவான அடுக்கை வடிவமைக்கிறது. இது ipv4 மற்றும் ipv6 இரண்டையும் கையாளுகிறது இதற்கு ஒரே ஒரு துணை நெறிமுறை மட்டும் தேவைப்படுகிறது (TCP, UDP, இன்னும் பல.) இணைப்பு தேடும் உதவி தொகுதி எழுதப்பட வேண்டும், உண்மையில் nf_conntrack ஏதாவது 3 நெறிமுறையிலும் பணிபுரிய திறனுள்ளது.

  • IPV6

    • RFC 3484-compliant மூல முகவரி தேர்ந்தெடுத்தல் (2.6.15)

    • ரௌட்டர் முன்னுரிமைக்கு துணைபுரிதலை சேர்க்கிறது (RFC4191) (2.6.17)

    • ரௌட்டர் ஆய்வு செய்து கண்டறிதலை சேர்க்கிறது (RFC4191) (2.6.17)

    • பல வழி அட்டவணைகள் மற்றும் கொள்கை வழியில் துணைபுரிதலை கொண்டுள்ளது

  • வடமில்லா மேம்படுத்தல்கள்

    • வன்பொருள் crypto மற்றும் ஒருங்கிணைத்தல் துணை

    • QoS (WME) துணைபுரிதல், "வடமில்லா வேவு துணைபுரிதல்"

    • கலந்த PTK/GTK

    • CCMP/TKIP துணை மற்றும் WE-19 HostAP துணை

    • BCM43xx வடமில்லா இயக்கி

    • ZD1211 வடமில்லா இயக்கி

    • வடமில்லா விரிவாக்கங்களின் WE-20, பதிப்பு 20 (2.6.17)

    • வன்பொருள் தனிப்பட்ட மென்பொருள் MAC layer சேர்க்கப்பட்டது, "Soft MAC" (2.6.17)

    • சேர்க்கப்பட்ட LEAP அங்கீகார வகை

  • generic segmentation offload (GSO) சேர்க்கப்பட்டது (2.6.18)

    • செயல்திறனை சில இடத்தில் மேம்படுத்தலாம், எனினும் ethtool மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்

  • DCCPv6 (2.6.16)

சேர்க்கப்பட்ட வன்பொருள் துணை

குறிப்பு

இந்தப் பிரிவு அனைத்திலும் பொதுவான பல வசதிகளை எண்ணுகிறது.

  • x86-64 கொத்திடப்பட்ட APIC துணைபுரிதல் (2.6.10)

  • Infiniband துணைபுரிதல் (2.6.11)

  • Hot plug

    • சேர்க்கப்பட்ட பொதுவான நினைவகம் சேர்த்தல்/நீக்குதல் மற்றும் நினைவக hotplug க்கு துணையான செயல்பாடுகள்(2.6.15)

    • hot plug CPU புதிதாக சேர்க்கப்படும் செயலிகளுக்கு துணைபுரிகிறது (ஏற்கனவே இருக்கும் CPUகளுக்கு hotplug செயல்நீக்கம் / செயல்படுத்தல் துணைபுரிகிறது)

  • SATA/libata மேம்படுத்தல், கூடுதல் வன்பொருள் துணை

    • ஒரு முழுவதுமான பணி செய்யப்பட்ட libata பிழை கையாளுதல்; இந்த அனைத்து பணியின் தீர்வு பல தவறான SATA துணை கணினியில் பல பிழைகளிலிருந்து விடுபடுகிறது.

    • Native Command Queuing (NCQ), SATA பதிப்பு ஒட்டப்பட்ட கட்டளை வரிசை - பல I/O கோரிக்கைகளில் செயல்திறன் அதே நேரத்தில் அதே இயக்கம் உள்ளது. (2.6.18)

    • Hotplug துணைபுரிதல் (2.6.18)

  • EDAC துணைபுரிதல் (2.6.16)

    • EDAC நோக்கம் கணினியில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்து அறிக்கையிடுவதாகும்.

  • சேர்க்கப்பட்ட ஒரு புதிய ioatdma இயக்கி Intel(R) I/OAT DMA engine (2.6.18)

NUMA (Non-Uniform Memory Access) / Multi-core

  • Cpusets (2.6.12)

    • Cpusets இப்போது CPUகள் மற்றும் நினைவக முனைகளுக்கு ஒரு நுட்பத்தை ஒரு பணியாக ஒதுக்குகிறது. Cpusetகள் CPU மற்றும் நினைவக பணியை நடப்பு cpusetக்கு மட்டும் மூலப்படுத்துகிறது. பெரிய கணினிகளில் மாறும் பணிகளை மேலாண்மை செய்ய அவசியமாக உள்ளது.

  • NUMA-aware slab allocator (2.6.14)

    • இது பல முனைகளில் அடுக்குகளை உருவாக்கி அவற்றை மேலாண்மை செய்கிறது, இதில் ஒதுக்கீடுகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒவ்வொரு முனையும் அதன் பகுதி, வெற்று மற்றும் முழு அடுக்குகளை கொண்டுள்ளது. முனையின் அனைத்து பொருள் ஒதுக்கீடுகளும் முனை குறிப்பிடும் அடுக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது.

  • இடமாற்று இடம்பெயர்தல் (2.6.16)

    • இடமாற்று இடம்பெயர்தல் பருநிலை இடத்தின் பக்கங்களை முனைகளுக்கிடையே NUMA கணினியில் பணி இயங்கும் போது அனுமதிக்கிறது..

  • Huge pages (2.6.16)

    • huge பக்கங்களில் NUMA கொள்கைக்கு துணைபுரிகிறது: huge_zonelist() செயல்பாடு நினைவக செயல்பாட்டு அடுக்கில் NUMA தொலைவில் மண்டலங்களின் பட்டியலை கொடுக்கிறது. hugetlb அடுக்கு இருக்கும் huge பக்கங்களில் மண்டலத்திற்கு பார்க்கிறது, ஆனால் அதுவும் nodesetன் நடப்பு cpuset ஆக உள்ளது.

    • Huge pages இப்போது cpusets க்கு துணைபுரிகிறது.

  • Per-zone VM counters

    • மண்டல அடிப்படையான VM புள்ளி விவரங்களை கொடுக்கிறது, இது ஒரு மண்டலத்தின் நினைவக நிலை என்ன என்பதை வரையறுக்கிறது

  • Netfilter ip_tables: NUMA-aware allocation. (2.6.16)

  • Multi-core

    • ஒரு புதிய திட்டமிடும் செயற்களம் multi-core ஐ குறிப்பது பகிரப்பட்ட இடையகங்களில் கோர்களுக்கிடையே சேர்க்கப்பட்டது. இது அந்த கணினிகளில் smarter cpu திட்டமிடும் முடிவுகளை எடுக்கிறது, சில நிகழ்வில் பெரிதாக செயல்திறனை அதிகரிக்கிறது. (2.6.17)

    • CPU திட்டமிடுதலின் மின் சேமிப்பு கொள்கை: multicore/smt cpuகளில், மின் சேமிப்பை சில தொகுப்புகளை வெறுமையாக விடுவது மூலம் மேம்படுத்தலாம். இதில் மற்றவர்கள் CPU களில் பணிகளை எல்லாவற்றிலும் பரப்பாமல் அனைத்து பணிகளையும் செய்யலாம்.

( x86 )



[1] இந்த விவரங்கள் Open Publication License, v1.0 இன் அடிப்படையிலான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி வழங்கப்பட்டிருக்கலாம், இது http://www.opencontent.org/openpub/ இல் உள்ளது.

mirror server hosted at Truenetwork, Russian Federation.